சினிமாவில் எளிதாக வெற்றியடைய முடியாது என பேசி உள்ளார் நடிகர் சாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சாம் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார் அதாவது, சினிமாவில் மிகவும் எளிதாக வெற்றியை அடைய முடியாது சினிமாவில் மிகவும் நேசித்தால் மட்டுமே வெற்றி கனியை எட்ட முடியும் அதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.அவர் சாதாரணமாக சினிமாவுக்குள் வரவில்லை பலவருடங்கள் கஷ்டப்பட்டு அனுபவத்தை பயன்படுத்தி தற்போது முன்னணி நடிகர் இடத்தை பிடித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.