Browsing tag

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சந்திப்பு.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

  சென்னையில் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டம்.. 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். […]

சிவகார்த்திகேயனின் 27-வது படம் தொடக்கம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK27 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ‘அமரன்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் புதிய அவதாரத்தில் நடிக்கிறார். ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். இருவரும் இணையும் […]

பாடலாசிரியராக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். மரியாதை நிமித்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்பது தொடர்பாகவும், சங்கத் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் KBB நவீன் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் சங்கத்தில் இணைந்துள்ளார். மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியதாக […]

சேயோன் திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சீமான், தனது காட்சிகளில் நடித்து வருகிறார். அவரது வருகையால் ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர். ராஜ்கமல் […]

16வது ஆண்டு திருமணத்தை ஒட்டி மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இன்று தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, […]

‘சேயோன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் புதிய உத்வேகத்துடன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். கதையின் அடுத்தகட்டத்திற்குள் படம் நகரும் நிலையில், முக்கியமான காட்சிகள் இந்தப் படப்பிடிப்பில் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். […]

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்

சிவகார்த்திகேயன் சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மே 18, 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாகராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படம், அதிரடி, குடும்ப உணர்வுகள் மற்றும் எமோஷனல் தருணங்கள் நிறைந்த முழுமையான விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பை கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு […]

சிவகார்த்திகேயன் வரிகளில் ‘வேலும் மயிலும்’ பாடல் வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தனது முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடலான ‘வேலும் மயிலும்’ பாடலை வெளியிட்டு, சுயாதீன இசை உலகிலும் புதிய அடியை பதித்துள்ளது. முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீக பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த இசைப் படைப்பை இயக்கியுள்ளார். புதிய கதைகள் மற்றும் திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், […]

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை: நடிகர் தேர்வுக் குறித்து பரவும் போலித் தகவல்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ (SivaKarthikeyan Productions) மூலம் தரமான படங்களை வழங்கி வரும் இவர், இதுவரை ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். […]