சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்

சிவகார்த்திகேயன் சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மே 18, 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாகராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படம், அதிரடி, குடும்ப உணர்வுகள் மற்றும் எமோஷனல் தருணங்கள் நிறைந்த முழுமையான விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

படப்பிடிப்பை கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.

‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் – ராஜ்கமல் ஃபிலிம்ஸ் கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.மகேந்திரன் மற்றும் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இணைவதால், ‘சேயோன்’ 2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Bhagyashri BorseKamal HaasanSanthosh NarayananSeyonSivakarthikeyanSivakumar Murugesanசேயோன்