ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார்.
படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாபு விஜய் படம் குறித்து தெரிவிக்கையில்,
‘இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம்.
நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. இதில் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பணிபுரிந்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம்’ என்றார்.