Web Ads

‘குட் பேட் அக்லி’ டிரைலருக்கு போட்டியாக, ஆத்விக் ரேஸிங் டீசர்?: ரசிகர்கள் உற்சாகம்

Web Ad 2

அஜித்தின் மனைவி ஷாலினி பகிர்ந்த நிகழ்வு வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்..

‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதனை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

வழக்கம்போல, படத்திற்கான புரமோஷனில் கலந்துகொள்ளாத அஜித், தற்போது பேமிலியோடு நேரத்தை கழித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்த அஜித், தற்போது சென்னை திரும்பி உள்ளார். சென்னை வந்த பின்னரும், கார் ரேஸில் தான் அவரது கவனம் இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை அவர் ரேஸ் விட்டது அவரது மகனுடன்.

அஜித் மகனுக்கு 10 வயசு தான் ஆகிறது. அவர்,கோ கார்ட் எனப்படும் சிறிய ரக கார்களின் பந்தயத்தில் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள இந்த கோ கார்ட் கார் ரேஸுக்கான டிராக்கிற்கு தன் மனைவி மற்றும் மகன் ஆத்விக்கை அழைத்து சென்ற அஜித். தன் மகன் ஆத்விக் உடன் கார் ரேஸ் ஓட்டி அசத்தி உள்ளார்.

தந்தை ரேஸராக பல கார்களை ஓட்டி இருந்தாலும், வேகத்தில் அவருக்கு டஃப் கொடுத்து அசத்தி உள்ளார் ஆத்விக். தந்தையும் மகனும் போட்டிபோட்டு கார் ரேஸ் ஓட்டுவதை பார்த்து ரசித்த ஷாலினி, அந்த அழகிய தருணத்தை வீடியோவாகவும் எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10 வயதிலேயே பயமின்றி காரை வேகமாக ஆத்விக் ஓட்டியதை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், அஜித் வீட்டில் அடுத்த ரேஸர் ரெடியாகி விட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆத்விக்கின் இந்த கார் ரேஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம டிரெண்டிங் ஆக உள்ளது. ஆக, ‘குட்லி பேட் அக்லி’ டிரைலர் ஒருபுறம் தெறிக்கிறது, மறுபுறம் ஆத்விக் கார் ரேஸ் தெறிக்கிறது.

ajith son aadvik stunned fans by driving race car