தமிழர் வீரத்தை எடுத்துக்காட்டும் ‘வாடிவாசல்’ திரைப்படம்: நடிகர் சூர்யாவின் புதிய தகவல்..

தமிழர் வீரத்தையும் பண்பாட்டையும் அரங்கேற்றுவதே ‘ஜல்லிக்கட்டு’ இதனை உணர்வுப்பூர்வமாக படமாக்கும் முயற்சியில் மாற்றமில்லை.
ஆம்.., சூர்யா நடிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக நிகழும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
தற்போது விடுதலை 2 படத்தில் கமிட்டாகி செயல்பட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக கங்குவா படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. வரும் நவம்பர் 14-ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகவுள்ளது. பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
இந்த படத்தை தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் ரிலீஸாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடிக்கவும் சூர்யா கமிட்டாகியுள்ளார். இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படம் நீண்ட நாட்களாக அடுத்த அறிவிப்பிற்காக வெயிட்டிங்கில் உள்ளது.
தற்போது விடுதலை 2 படத்தில் கமிட்டாகியுள்ளார் வெற்றிமாறன். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யாவுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கங்குவா படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வரும் சூர்யா, வாடிவாசல் படம் குறித்தும் பேசியுள்ளார்.
வாடிவாசல் படத்தின் சூட்டிங்கிற்காக தன்னுடைய காளை மாடும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் காத்திருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். வாடிவாசல் படம் கண்டிப்பாக நிகழும் என்றும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் அறிவிப்பு வெளியான நிலையில், சொந்தமாக காளை மாடு ஒன்றை வாங்கி சூர்யா பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டும் சென்னையில் நடந்தது.
இவை அனைத்தும் படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்த நிலையில், விடுதலை படத்தில் கமிட்டான வெற்றிமாறன் தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் செயல்பட்டு வருகிறார்.
இதனால், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது. விரைவில் விடுதலை 2 படத்தை ரிலீஸ் செய்து விட்டு வெற்றிமாறன் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆர்ஜே பாலாஜி உடனான படத்தையும் சூர்யா நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், உணர்வுகளை மையமாக வைத்து கதைக்களத்தை உருவாக்கிவரும் வெற்றிமாறன், இந்தப் படத்தில் என்ன மாதிரியான கதையை கையிலெடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட காலங்களாக காணப்படுகிறது.
படம் கைவிடப்பட்டதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், படம் கண்டிப்பாக சூட்டிங் துவங்கப்படும் என்று வெற்றிமாறனும் தற்போது சூர்யாவும் தெரிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
கொம்பு வெச்ச சிங்கமாய், படம் சீறி வருக.!
