ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் பார்த்து, நடிகர் சந்தீப் கிஷன் விமர்சனம்

‘கூலி’ படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ள அப்டேட் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் 75% ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் ‘காவாலா’ போல ஒரு பாடலுக்கு ஹீட்டாக நடனமாடி உள்ளார்.
இச்சூழலில் ‘கூலி’ பட முதல் விமர்சனம் போல, லோகேஷின் நண்பர் சந்தீப் கூறிய தகவல் வைரலாய் தெறிக்கிறது. தெலுங்கு திரையுலக நடிகர் சந்தீப் கிஷன், தமிழில் ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘மசாக்கா’ படத்தில் நடித்து வரும் இவர், ‘கூலி’ படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதற்கு சந்தீப் கிஷன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் நடிகர் சந்தீப் கிஷன் ‘கூலி’ படம் குறித்த அப்டேட்டாக தெரிவிக்கையில், ‘கூலி திரைப்படத்தின் 45 நிமிடக் காட்சிகளை பார்த்துவிட்டேன். ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்தும். கண்டிப்பாக, இப்படம் 1000 கோடி வசூலை குவிக்கும்’ என கூறியிருக்கின்றார். இதனால், ரஜினி ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என தெரிகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
‘கூலி’ படம் வெளியான பிறகு, ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்கிறார். அவ்வகையில், ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது, அவரது பிறந்த நாளில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மணிரத்னமா, மாரிமுத்தா, வெற்றிமாறனா.. என்பது தலைவர் கையில்.! முன்னதாக, ‘கூலி’ படம் 1000 கோடி வசூல் குவிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
