விஜி சொன்ன வார்த்தை,நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நான்கு பேரும் இசிஆர் ரெசார்ட்க்கு காரில் கிளம்புகின்றனர். என்ன மச்சான் சந்தோஷமா இருக்க போல என்று கேட்க எனக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் என்ன குடிச்சாலும் எனக்கு போதை ஏறல பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிடுச்சு. ஓல்ட் பிரண்டு உள்ள போய் சுருக்குன்னு ஏத்திவிட்டது நிம்மதியா இருக்கு என்று சொல்லுகிறார். நம்ப வேணா திரும்பவும் கன்னியப்பன் கிட்ட சரக்கு வாங்கிக்கலாம் என்று சொல்ல சூர்யா, அவன் கிட்ட வேணாம் அவ ராசி இல்லாதவன் என்று சூர்யா சொல்லுகிறார். உடனே விஜி ரெண்டு பேரும் குடிபுராணத்தை கொஞ்சம் நிறுத்துங்கள் என்று சொல்லுகிறார்.
இந்தக் கார்ல ஒரு ஜீவன் மௌன விரதம் இருக்க மாதிரி வருது அத பத்தி யாராவது யோசிச்சீங்களா என்று கேட்டவுடன் அதுதானே என்று சொல்லிவிட்டு சூர்யா ஏதாவது பிரச்சனையான நந்தினி என்று கேட்கிறார். ஒன்றுமில்லை என்று நந்தினி சொல்ல, அத கூட ஏமா நாலு நாள் சாப்பிடாத மாதிரி சொல்ற சந்தோஷமா தான் சொல்றேன் என்று சொல்லுகிறார். அதுதான் நீங்க பேசுறீங்க இல்ல பேசுங்க நான் வேடிக்கை பாத்துட்டு வரேன் என்று சொல்ல, விவேக் நந்தினியிடம் சூர்யா நல்லவரா?கெட்டவரா? என்று கேக்க அதற்கு நான் பதில் சொல்றேன் என சூர்யா கெட்டவன் என சூர்யாவே பதில் சொல்லுகிறார். உனக்கு புடிச்ச நடிகர் யார் என்று கேட்க, விஜயகாந்த் என்று சொல்லுகிறார். எங்க ஊர்ல திருவிழாவில் இரண்டு படம் போடுவாங்க, அதில் ஒன்று விஜயகாந்த் சார் படமாய் இருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும் எல்லாரும் பாய் போட்டு தலையணை போட்டு படுத்துகிட்டு பார்ப்போம்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான எந்த திரைப்படம் உனக்கு பிடிக்கும் என்று கேட்க எல்லா படமும் பிடிக்கும் என சொல்லுகிறார். உடனே விவேக் விஜயகாந்த் போல் பேச நந்தினி சிரிக்கிறார் உடனே விஜி சூர்யாவிடம் இதுக்கு மேல நந்தினி சோகமாக இருந்தால் ஏதாவது விஜயகாந்த் பாட்டு போட்டுருங்க என்று சொல்ல போட்டுட்டா போகுது என்று சூர்யா சொல்லுகிறார். பிறகு அவர்கள் ரெசார்ட்க்கு வந்து இறந்த அங்கு இருப்பவர்கள் அவர்களை அங்கிருந்து ஒரு வண்டியில் ரூம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வருகின்றனர். ரெசார்ட் சூப்பரா இருக்கு என்று விஜி சொல்ல நம்ப வர முடிவு பண்ணது சாதாரண ஹோட்டல் தான் ஆனா சூர்யாவும் வரேன்னு சொன்ன உடனே அருணாச்சலம் சார் புக் பண்ணி இருக்காரு என்று சொல்லுகிறார். இந்த இடத்துக்கு எல்லாம் நீ வந்ததில்லையா நந்தினி என்று கேட்க எங்க பரம்பரையிலேயே இந்த இடத்துக்கு வந்ததில்ல என்று சொல்லுகிறார்.
வண்டியில் வந்து இறங்கியவுடன் சூர்யா மற்றும் நந்தினிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு நீங்க ரூமுக்கு போங்க என்று சொல்லி அனுப்புகின்றனர். லக்கேஜ் எடுக்க ஆளை அனுப்ப நந்தினி நானே எடுத்துக்கிறேன் என்று சொல்ல, விஜி அதெல்லாம் அவங்க வேலை வா நந்தினி என்று சொல்லி கூப்பிடுகிறார். விவேக் இந்த ரெசார்ட் சூப்பரா இருக்கு நாலு நாள் ஜாலியா என்ஜாய் பண்ண போறோம் என்று சொல்ல விஜி உடனே நந்தினி இடம் எங்க நீ நாலு நாள் ஃப்ரீயா இருக்கலாம் ரூம் கிளீன் பண்றேன் சமைக்கிறேன் எல்லாம் எதுவும் பண்ணிடாத என்று சொல்ல நந்தினி சிரிக்கிறார். சரி இப்ப ரூமுக்கு போ அப்புறம் மீட் பண்ணலாம் என சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்ப சூரியா முன்னாள் நடந்து சென்று விடுகிறார். நந்தினி எந்த பக்கம் போவது என புரியாமல் திருத்திருவென அங்கேயே முடித்துக் கொண்டு நிற்கிறார்.
விவேக் மற்றும் விஜி இருவரும் ரூமுக்குள் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க நந்தினி வந்து கதவை தட்டுகிறார். என்னாச்சு நந்தினி போன வேகத்துல வந்துட்ட என்று கேட்கின்றனர். நம்ம ஒன்னு பண்ணலாம் நம்ம இந்த ரூம்ல தங்கிக்கலாம் அவங்க ரெண்டு பேரும் அந்த ரூம்ல தங்கி கட்டும் என்று சொல்ல சூர்யா அண்ணா ஏதாவது சொன்னாரா என்று கேட்க, நான் இன்னும் ரூமுக்கே போகல அவர் கூட ஒன்னா தங்க ஒரு மாதிரி இருக்கு அதனால உங்க கிட்ட கேட்க வந்தேன் என்று சொல்லுகிறார். யாராவது இதைக் கேட்டா தப்பா நினைப்பாங்க, சூர்யா அண்ணன் உன்னோட புருஷன் அவர் கூட ஒரு ரூம்ல தங்க உனக்கு எதுக்கு ஒரு மாதிரி இருக்கு என்று கேட்கிறார். வீட்ல ஒரே ரூம்ல தானே இருக்கீங்க அப்புறம் என்ன என்று கேட்கிறார். நம்ம எப்பவுமே பேசுறது தானே நம்ம அப்புறமா பேசிக்கலாம் நீ இப்ப ரூமுக்கு போ போய் அண்ணன கூட்டிட்டு வா பசிக்குது சாப்பிட போகலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இவங்க ரெண்டு பேரும் சேர்த்து வைத்த குள்ள நம்ம பிரிஞ்சிடுவோம் போல என்று விவேக் சொல்லுகிறார்.
பிறகு விஜி நந்தினி விவேக் மூவரும் நடந்து கொண்டு இப்போ போய் சாப்பிட போவோம் அதுக்கப்புறம் என்ன பண்றது என்று கேட்க சாப்பிடுவோம் விளையாடும் தூங்குவோம் என்று சொல்ல அப்போ இங்கே எந்த வேலையும் இல்லையா என்று கேட்க, நம்ம இங்க ஜாலியா இருக்க வந்திருக்கோம் என்று சொல்ல காசு கொடுத்து ரெஸ்ட் எடுக்கணுமா என்று நந்தினி கேட்கிறார். மச்சான் எங்கே என்று கேட்க எனக்கு முன்னாடியே அவரு கிளம்பிட்டாரு என்று சொல்லுகிறார். இவர்கள் மூவரும் சூர்யாவை தேடிக் கொண்டிருக்க அவர் வேகவேகமாக பாருக்கு சென்று சண்டை போட்டுக் கொண்டிருக்க அவர்கள் இன்னும் பார் டைம் இருக்கு என்று சொல்ல இவ்வளவு நேரம் ஏன் ஓபன் பண்ணல என்று கேள்வி கேட்கிறார். அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு இப்போ வேணும் என்று அவர்களிடம் வம்பு இழுத்துக் கொண்டு இருக்க விவேக் கவனித்து விட்டு ஓடி வந்து சூர்யாவை தடுத்து நிறுத்துகிறார். நீயே கேளு மச்சான் பாரிர் தொறக்க சொன்னா ரூல்ஸ் இருக்குதுன்னு பேசுறாங்க நீ கேளு என்று சொல்லுகிறார். விவேக்கிடம் சொல்ல, நான் ஆசைப்பட்ட அப்ப எனக்கு சரக்கு கிடைச்சாகணும், அப்படி கிடைக்கலன்னா எனக்கு இந்த ரெசார்ட் வேண்டாம் இப்பவே போகலாம் என்று சொல்ல இப்போ சாப்பிட டைம் ஆயிடுச்சு நம்ம சாப்பிட்டுட்டு சரக்கு அடிக்கலாம் என்று சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். பிறகு நால்வரும் சாப்பிட உட்கார விஜி அங்க எதுக்கு அண்ணா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க பாக்கவே ஒரு மாதிரி இருக்கு என்று சொல்ல, பின்ன பார் ஓபன் பண்ணாம இருந்தா என்ன பண்ணுவாங்க என்று கேட்கிறார்.
பிறகு ஆர்டர் எடுக்க வர, விஜி மீன் பொளிச்சது ஆர்டர் பண்ணலாம் என்று சொல்ல சூர்யா டிராகன் சிக்கன் ஆர்டர் பண்ணலாம் என்று சொல்ல உனக்கு என்ன தேவையோ அதை சொல்லு என்று சொல்ல நந்தினி, இதுல ஒண்ணுமே புரியலையே ஏதாவது ஆர்டர் பண்ணி வேற ஏதாவது வந்துட்டா என்ன பண்றது என்று யோசித்து விட்டு, தோசை என சொல்லிவிடுகிறார். விஜி இங்க வந்து தோசை தானா என்று கேட்க விவேக் நந்தினிக்காக சூர்யா ஆர்டர் பண்ணுவா என்று சொல்ல, சூர்யா நந்தினி இடம் உனக்கு என்ன புடிக்கும் என்று கேட்கிறார். அவங்க பிடிக்கும்னு தெரிஞ்சு இருந்தா ஆர்டர் பண்ணி இருக்க மாட்டாங்களா என்று சொல்லிவிட்டு விவேக் நானே ஆர்டர் செய்றேன் என்று சொல்லி ரெசார்ட்டில் நண்டு சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளையும் ஆர்டர் செய்ய, நந்தினி விவேக்கிடம் எதுக்கு இவ்வளவு நண்டு ஐட்டம் சொல்லி இருக்கீங்க கூப்டு மாத்தி வேற ஃபுட் சொல்லுங்க நண்டு உடம்புக்கு சூடு என்று சொல்ல விவேக் சூடானதா எல்லாம் கரெக்டா இருக்கும் சூர்யாவிற்கு நண்டு என்றால் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல சூர்யா கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஆமாமா எனக்கும் நண்டுனா ரொம்ப பிடிக்கும் நானே மறந்துட்டேன் என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நீயும் வா சூர்யா அண்ணனும் வருவாரு எல்லாரும் சேர்ந்து எடுத்துக்கலாம் என்று கூப்பிட அவர் கூட எல்லாம் நான் வரலை என்று சொல்லுகிறார் நந்தினி. சூர்யா கேம் விளையாடிக் கொண்டிருக்க விவேக் நீயும் நந்தினியும் விதவிதமா போட்டோ எடுத்து உங்க அம்மா முன்னாடி நின்னா உங்க அம்மா எவ்வளவு டென்ஷன் ஆவாங்க என்று சொல்லுகிறார்.
நந்தினி விஜியிடம் அவங்க ரொம்ப ஓவரா பண்றாங்க நீங்களும் தான் சார் என்று சொல்லுகிறார். என நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
