காளி வெங்கட் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படத்தின் தொடக்க விழா சென்னை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பா. விஜய் கார்த்திக்கேயன் இயக்கும் இந்த படம் தற்போது பெயரிடப்படாமல் தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் காளி வெங்கட்டுடன் ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ், விஜே பாரு, வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்ப அணியிலும் பலர் இணைந்துள்ளனர். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, பாடல்களை விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர். சக்தி திரு படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை ராம்போ விமல் மேற்கொள்வதுடன், ஆடை வடிவமைப்பை கவிதா கவனிக்கிறார். நடன அமைப்பை ராதிகா வடிவமைக்கிறார்.
குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தயாராகி வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பா. விஜய் கார்த்திக்கேயன் கூறுகையில், “1995ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க ஒரு தந்தை போராடும் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியுடன் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
