
கலங்கி நிற்கும் மனோஜ், ஆறுதல் சொல்லும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
கலங்கி நிற்கும் மனோஜ்க்கு ரோகினி ஆறுதல் சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சுருதிடம் அவர் யாரையோ துரத்திகிட்டு போயிருக்காரு அப்போ நிறைய பேரு தள்ளிவிட்டு போயிருக்காரு அவங்களுக்கு அடி பற்றுக்கு அப்புறம்தான் வேன் மோதி இருக்கு என்று சொல்ல, இது வேறயா என்று கேட்க, இப்பதான் நாங்க அவங்களுக்கு காசு கொடுத்துட்டு வந்தோம் என்று மீனா சொல்லுகிறார். அவங்களுக்கு கண்ணு சரியாயிடுமா என்று கேட்க கிரிட்டிக்கல் தான் என்னாகுதுன்னு பார்க்கலாம் என்று ஸ்ருதி சொல்லுகிறார்.
உடனே டாக்டர் வெளியில் வர, விஜயா என் பையனுக்கு என்ன ஆச்சு சார் கண்ணு தெரியுதா என்று கேட்க அவருக்கு ஆபரேஷன் முடிஞ்சு இப்பதான் கான்ஷியஸ்க்கு வந்து இருக்காரு டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க அவரை எமோஷனலாக கூடாது என்று சொல்லுகின்றனர். உடனே குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வர மனோஜ் சத்தம் கேட்டு யாரு யாரு வரிங்க என்று கேட்க குடும்பத்தினர் கண்கலங்குகின்றனர். ரோகினி மனோஜ் கையை பிடித்து உனக்கு ஒன்னும் இல்ல மனோஜ் பயப்படாதே என்று அழுது கொண்டே சொல்ல எனக்கு கண்ணு தெரியல ரோகிணி எல்லாமே இருட்டா இருக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு எனக்கு கண் பார்வை போயிடுசா ரோகினி என்று அழுகிறார்.
உடனே விஜயா அப்படி எல்லாம் இல்ல அப்படி எல்லாம் நினைக்காத உனக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்ல அம்மா நான் உன்ன பாக்க முடியல அம்மா. நீ என்ன சின்ன வயசுல கண்னே தானே கொஞ்சுவ ஆனா அந்த கண்ணாலே இப்போ உன்னை பார்க்க முடியலமா நான் படிச்சது எல்லாம் வேஸ்டா என்னோட பிசினஸ்மேன் கனவு எல்லாம் முடிஞ்சிடுச்சா என்று கண் கலங்க அண்ணாமலை அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார். பிறகு அண்ணாமலையும் கண்கலங்கி கொண்டே இருக்க மனோஜ்க்கு பயம் அதிகமாகிறது. உடனே ரோகினி நான் என்னோட கண்ணு கொடுத்து கூட இந்த உலகத்தை உன்னை பார்க்க வைப்பேன் மனோஜ் என்று சொல்ல என்னோட உலகமே நீதான் ரோகினி நான் உன்ன பார்த்தா மட்டும் போதும் என்று சொல்லுகிறார்.உடனே விஜயா கடவுளே என் கண்ணு கூட எடுத்துக்கோ என் பையனுக்கு கல்லை கொடுத்திடு என்று சொல்ல அண்ணாமலை கலங்குகிறார்.
ரவி தைரியமா இருடா ஒன்னும் ஆகாது டாக்டர் செக் பண்ணிட்டு போயிருக்காங்க, ரிசல்ட் பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல அப்போ ரிசல்ட் எனக்கு கண்ணு தெரியாதுன்னு வந்துருச்சுன்னா நான் என்ன பண்றது என்று கேட்க அதற்கு முத்து அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுடா நீ தைரியமா இரு என்று சொல்லுகிறார் உன் கண்ணில் கண்ணாடி குத்திருக்கு அது ஆபரேஷன் பண்ணி சரி பண்ணி இருக்காங்க உனக்கு பார்வை வந்ததும் என்று சொல்ல அப்போ கண்ணுல கண்ணாடி குத்துச்சின்னா எப்படி பார்வை வரும் அவ்வளவுதானா என்று மனோஜ் பதறுகிறார். கூடவே சுருதி அவரதான் எமோஷனலாக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல ஃபர்ஸ்ட் நீங்க தைரியமா இருங்க ஒன்னும் ஆகாது என்று சொல்ல முத்து மீனாவும் ரூமில் இருந்து வெளியே வந்து வருத்தப்படுகின்றனர்.
அவர பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குங்க என்று சொல்ல அதற்கு முத்து அவர் ஏற்கனவே பயந்தவன் இப்போ ரொம்ப பதறிப் போய் இருக்கா என்று சொல்ல மீனா பக்கத்தில் இருக்கிற விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று முடிவு எடுத்து வருகின்றனர். அப்போது மனோஜ் தலையில் அடித்த டிராபிக் போலீஸ் கட்டு போட்டுக்கொண்டு மனோஜை விசாரிக்க முத்து அதனை கவனித்து என்னோட அண்ணன் தான் மனோஜ் என்று சொல்லி என்ன விஷயம் என்று கேட்கிறார்.
அவர்கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கணும் என்று சொல்லி வருகின்றனர். சரி வாங்க என்று இருவரும் அழைத்து செல்ல மனோஜிடம் போலீஸ் விசாரிக்கிறார். யாரை துரத்திகிட்டு போனீங்க என்று கேட்க கதிர் என்று சொல்லுகிறார் அண்ணாமலை நீ பணம் ஏமாந்தே அவனா என்று கேட்க அவன் தான் என்று சொல்லுகிறார். உடனே முத்து போலீஸ் கேட்க கேட்க வேண்டிய கேள்வியை வண்டி நம்பர் பாத்தியா கூட யாராவது இருந்தாங்களா என்று கேட்க போலீஸ் நாங்க கேட்க வேண்டியது நீங்களே கேட்டா அப்புறம் நாங்க என்ன கேட்கிறது என்று சொல்ல அனைவரும் முத்துவை அமைதியாக இருக்க சொல்லுகின்றனர். பிறகு மனோஜிடம் எங்க பார்த்தீங்க எந்த ஏரியா என்று விசாரித்துவிட்டு சரியாக பார்த்துகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். கொஞ்ச நேரத்தில் மனோஜ்க்கு ஆப்ரேஷன் பண்ண பில் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து 75,000 பணம் கட்டுமாறு சொல்லுகின்றனர் என்ன செய்வதென புரியாமல் இருக்க அண்ணாமலை பில் வந்திருக்கான காசு கொடுக்கட்டுமா என்று கேட்க இல்லப்பா நாங்களே பார்த்துகிறோம் என்று சொல்லுகிறார். உடனே இருவரும் தெரிந்தவர்களுக்கு போன் பண்ணி விசாரிக்க 35 ஆயிரம் ரெடியாகிறது. உடனே அண்ணாமலை வந்து பணம் பத்தலையா நான் கொடுக்கிறேன் என்று சொல்ல அதெல்லாம் இல்ல பாத்து தெரிஞ்சவங்க மூலமா ரெடி பண்ணியாச்சு விடுப்பா என்று சொல்ல அவர் சென்று விடுகிறார்.
மறுபக்கம் மனோஜ்க்கு ரோகினி சாப்பாடு ஊட்டி விட அவர் ரோகினியிடம் என்ன கேட்கிறார்?அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
