Web Ads

இனியாவுக்கு வார்னிங் கொடுத்த பாக்யா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

இனியாவிற்கு பாக்யா வார்னிங் கொடுக்க ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 01-03-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 01-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை சாப்பிட பாக்யா கூப்பிட அவர் எனக்கு தேவையில்லை என்று சொல்லி சொல்லுகிறார். உங்களுக்கு மாத்திரை போடணும் இல்லனா மயக்கம் வந்துரும் என்று சொல்ல நான் எப்படியாவது போறேன் உனக்கு என்ன நீதான் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்ட அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்று சொல்ல நான் உங்கள போக சொல்லல நீங்க சொன்னதுக்கு பதில் மட்டும் தான் சொன்னேன் என பாக்கியா சொல்லுகிறார். ஆனால் ஈஸ்வரி பிடிவாதமாக எனக்கு சாப்பாடு வேண்டாம் போ என சொல்லி விடுகிறார்.

ரூமில் இருந்து வெளியே வந்த பாக்யா கிச்சனுக்கு செல்ல என்ன ஆச்சுக்கா என்று செல்வி கேட்கிறார். சாப்பாடு வேணாம்னு சொல்றாங்க என்று சொல்ல இது வழக்கமா நடக்கிறது தானே என்று சொல்ல, பாக்கியா இனியாவிடம் நீ சாப்பிடுறியா இனியா என்று கேட்க இன்னும் எனக்கு கொஞ்சம் எழுதற வேலை இருக்கு நான் முடிச்சுட்டு சாப்பிடுகிறேன் என்று சொல்லுகிறார் பிறகு நீ சாப்பிடும்போது பாட்டிக்கு சாப்பாடு குடு அவங்க சாப்பிடலைன்னா உங்க அப்பா கிட்ட சொல்லு என்ன சொல்லுகிறார். சரி நான் பாத்துக்குறேன்மா என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்ப நீ சாப்பிடலையா அம்மா என்று கேட்க நான் ரெஸ்டாரன்ட்ல சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பாக்கியா சென்று விட்டு திரும்பும் மீண்டும் வந்து அவங்க மதியம் ரெண்டு மாத்திரை சாப்பிடணும் அதையும் சொல்லு என்று சொல்ல சரி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி பாக்யா சென்றவுடன் உடனே இனியா ஆகாஷுக்கு போன் பண்ணி விடுகிறார்.

பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பழனிசாமி சார் என்ன சொல்லி இருக்காரு நீ வேலை செய்யக்கூடாது என்று தானே எதற்கு செஞ்சுகிட்டு இருக்க என்று சொல்ல ஆள் எல்லாம் பிஸியா இருக்காங்க நம்ம ரெஸ்டாரன்ட் தானே விடு செல்வி என சொல்லிவிட்டு போனை எடுத்து இனியாவிற்கு ஃபோன் பண்ண பிஸி என வருகிறது இதனால் பாக்யா ஒரு போன் எடுத்து மரியாதைக்காவது என்னன்னு கேட்கிறாளா பாரு என்று சொல்ல எனி டைம் போன்லயே தான் இருக்கா என்று சொல்லுகிறார். உடனே செல்வி இந்த காலத்து பசங்க அப்படி தான் அக்கா இருக்காங்க என் பையனும் அப்படி தான் பேசிக்கிட்டே இருக்கான்னு கேட்டா பிரெண்டுனு சொல்றான் என்று சொல்லுகிறார். பாக்கியா திரும்பவும் ட்ரை பண்ண பிஸியாக இருக்க டென்ஷன் ஆகி போனை வைத்து விடுகிறார்.

பிறகு கோபி ஈஸ்வரியை உட்கார வைத்து சாப்பாடு கொடுக்க எனக்காக நீ எதுக்கு கஷ்டப்பட்டு வர கோபி நான் உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீங்க தான் எனக்கு முக்கியம் என்று சொல்லி சாப்பாடு போட எந்த கோவமா இருந்தாலும் சாப்பாட்டு மேல காட்டாதீங்க என்று சொல்லுகிறார் இல்ல கோபி அவ ஓவரா பேசிட்டா என்று சொல்ல அவ பக்கம் நியாயம் இருக்கு பேசட்டும் விடுங்கம்மா என்று கோபி சொல்லுகிறார். ஈஸ்வரி சாப்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்யா வருகிறார். பாக்யாவை பார்த்தவுடன் ஈஸ்வரி சாப்பாடு போதும் என எழுந்து சென்றுவிட கோபி அம்மா சாப்டாங்க டோன்ட் வரி என்று சொல்லிவிட அதற்கு பாக்யா தேங்க்ஸ் என சொன்னவுடன் கோபி அங்கிருந்து சென்று விடுகிறார்.

இனியா பாக்யாவிடம் நீ வாரத்துக்கு முன்னாடி வரைக்கும் பாட்டி நல்லா தான் சாப்டாங்க மதியமும் சாப்பிட்டாங்க ஆனா நீ வந்த உடனே சாப்பிடாம போயிட்டாங்க அதுவு இல்லாம நீ எத்தனை நாள் ரெஸ்டாரண்டில் இருந்து ஓடி வந்து பாட்டிக்கு சாப்பாடு கொடுத்து இருக்க ஆனா உங்க அப்ப எல்லாம் எதுவுமே சொல்லல டாடி ஒரு வேலை வந்தவுடனே உன்னை கஷ்டப்படுத்துற கோபி என்று சொல்றாங்க என்று சொல்ல உங்க பாட்டி சாப்பிடலைன்னு உங்க அப்பா கிட்ட சொன்னியா என்று கேட்க ஆமாம் சொன்னேன் என்று இனியா சொல்லுகிறார் அப்போ அதையே என்கிட்ட சொல்லல என்று கேட்கிறார். உனக்கு ஒருவாட்டி ரெண்டு வாட்டி இல்ல நாலுவாட்டி போன் பண்ணேன் அப்பயும் வெய்ட்டிங்ல தான் இருந்தது யார்கிட்ட தான் பேசிகிட்டு இருந்த என்று கேட்க படிப்பு சம்பந்தமா பிரண்டு கிட்ட தான் பேசிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். உடனே பாக்யா நான் வெளியே போயிட்டு அதுக்கப்புறம் வீட்ல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்காத எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன் உன்னையும் கவனிச்சிட்டு தான் இருக்கேன் என்று சொல்ல நான் எந்த தப்பும் பண்ணலமா என்று இனியா சொல்லுகிறார் தப்பு பண்ணாத வரைக்கும் உனக்கு நல்லது என்று சொல்லிவிட்டு பாக்யா சென்று விடுகிறார்.

பிறகு ஹாலில் உட்கார்ந்து கணக்கு வழக்குகளை பாக்யா பார்த்துக் கொண்டிருக்க, கோபி தண்ணீர் எடுக்க கிச்சனுக்கு வர இவ்வளவு லேட்நைட் ஆயிடுச்சு பாக்கியா இன்னும் தூங்கலையா என்று யோசித்து விட்டு கிச்சனுக்கு சென்று பாக்கியாவுக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து ஏற்கனவே லேட் நைட் தூங்குற, காலைல சீக்கிரமா எழுந்துக்கிற உடம்பு என்ன ஆகிறது என்று அட்வைஸ் கொடுக்க பாக்யா எதுவும் பேசாததால் பிரண்ட்லியா தான் சொன்னேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் செல்வி பாக்கியாவிடம் பேச பாக்யா சோர்வாக இருப்பதை பார்த்து முடியலையா என்று கேட்க நேத்து கணக்குல பாத்துட்டு தூங்க நேரம் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார். ரெஸ்டாரன்ட் பற்றி பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி ஹாலில் வந்து உட்காருகிறார் கோபியும் வந்து உட்காரா பேசிக்கொண்டிருக்க இது யாருக்கு போட்ட காபி திறந்திருக்கு என்று சொல்லுகிறார். அதற்கு கோபி என்ன சொல்லுகிறார்? ஈஸ்வரி என்ன பதில் சொல்லுகிறார்? பாக்யா என செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 01-03-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 01-03-25