
குட் பேட் அக்லி படத்தின் டீசர் படைத்த சாதனை.. சூப்பர் தகவல் இதோ.!!
குட் பேட் அக்லி படத்தின் டீஸர் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி இருந்தது. அதில் அஜித்தின் கெட்டப் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இந்த டீசரை யூடியூபில் 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை குட் பேட் அக்லி முறியடித்து மிகப்பெரிய சாதனை படைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
