கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் செந்தில் படம்; கதை பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

Web Ads

‘தாதா’ வேடத்தில் நடிக்கும் செந்தில் திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்..

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணி நடிப்பில் உருவான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், தற்போது செந்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் பிஎம்எஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், முரளி பிரபா தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

Web Ad 2

இந்தப் படத்தில் செந்தில் லீடு ரோலில் நடிக்கிறார். அவருடன் இணைந்து கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன், ஸ்ரீவித்யா, வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் சாய் பிரபா மீனா கூறுகையில், இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக ஆக்‌சன் கமர்ஷியல் ஜானரில் உருவாக இருக்கிறது.

அதாவது, ஒரு நாற்காலிக்கு 4 கேங்க்ஸ்டர்கள் போட்டி போடுகிறார்கள். கடைசியில், அந்த நாற்காலியில் அமரப் போவது யார்? என்பது தான் படத்தோட கதை. இப்படம், முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் திருப்பங்களுடன், கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கோவா போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில், படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட இருக்கிறோம்’ என்றார்.

actor senthil plays a gangster