ஒரு இயக்குனர் உதயமாகிறார்: நடிகர் விஜய் மகனை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் மகனும்
ஏ.ஆர்.முருகதாஸிடம் தொழில் கற்றுக்கொண்டிருக்கும் ஆர்ஜித் பற்றிய தகவல் பார்ப்போம்..
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘மதராஸி’ என தலைப்பு வைத்து டீஸரை வெளியிட்டனர். ஆக்சன் காட்சிகள் நிறைந்த ‘மதராஸி’ டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயனிடம் விஜய் வெறும் துப்பாக்கியை தான் கொடுத்தார். ஆனால் ஏ.ஆர். முருகதாஸோ துப்பாக்கி போன்ற ஒரு சூப்பர் படத்தையே சிவகார்த்திகேயனுக்கு கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த படத்தில் முருகதாஸுக்கு உதவியாளராக வேலை செய்து வருகிறார் திரைப்பலத்தின் வாரிசு. அதாவது, இயக்குனர் ஷங்கரின் மகன் ஆர்ஜித் இப்படத்தில் வேலை செய்கிறார்.
இவர், டான்ஸ் கற்றவர். மகனை ஹீரோவாக வைத்து படம் எடுப்பார் ஷங்கர் என எதிர்பார்த்த நிலையில், முருகதாஸிடம் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார். பார்க்க ஹீரோ மாதிரி இருந்தாலும் ஆர்ஜித்துக்கு தன் அப்பா போன்று இயக்குனராகவே விருப்பம் என்கிறார். அதனால், ஏ.ஆர். முருகதாஸிடம் தொழில் கற்றுக்கொள்ளுமாறு அனுப்பி வைத்திருக்கிறார் ஷங்கர்.
பாலிவுட்டில் எத்தனையோ வாரிசுகள் உதவி இயக்குனர்களாக வேலை செய்துவிட்டு ஹீரோ ஆகியிருக்கிறார்கள்.
அதுபோன்று ஆர்ஜித் ஷங்கரும் படம் இயக்க கற்றுக்கொண்டு விட்டு ஹீரோவாக வருவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.