A1 Movie Review : Tara Alisha Berry, Santhanam, Motta Rajendran, Sai Kumar, K. Johnson, Cinema Review, Kollywood, Latest Cinema Review, Tamil Cinema Review
ஜான்சன் கே அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் எஸ். ராஜ் நாராயணன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் A 1 (அக்யூஸ்ட் No 1).

A 1 Movie Review : சந்தானம், தாரா அலிஷா பெரி, மொட்டை ராஜேந்தர், மனோகர், சுவாமி நாதன், சாய் குமார் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

படத்தின் ஆரம்பத்திலேயே ஹீரோயின் ஒரு ரவுடி கும்பலில் சிக்கி கொள்ள அவர்களை சந்தானம் நெற்றியில் நாமத்துடன் காப்பாற்ற சந்தானம் அய்யங்கார் வீட்டு பிள்ளை என நம்பி காதலில் வீழ்ந்து அவருக்கு லிப் லாக் கிஸ்ஸும் கொடுத்து விடுகிறார் தாரா அலிஷா.

அதன் பின்னர் சந்தானம் பற்றிய உண்மை தாராவுக்கு தெரிய வர லவ் பிரேக்கப் ஆகி விடுகிறது. அதன் பின்னர் ஒரு நாள் ஹீரோயினின் அப்பா உயிருக்கு போராட அவரை காப்பாற்றுகிறார் சந்தானம். இதனால் மீண்டும் காதல் மலர்கிறது.

சந்தானம் குடும்பத்தினர் தாரா வீட்டிற்கு சென்று பெண் கேட்கின்றனர். ஆனால் அங்கு இவர்களுக்கு ஏமாற்றமும் அவமானமும் தான் ஏற்படுகிறது.

விஜய், சூர்யாவை தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான ட்ரீட்.!

ஒரு நாள் மது போதையில் நடந்ததை சந்தானம் தன்னுடைய நண்பர்களிடம் உளறி கொட்ட அதன் பின்னர் என்னென்னா விபரீதம் ஏற்படுகிறது? இறுதியில் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சந்தானத்தின் நகைசுவை கலந்த நடிப்பு ரசிகர்களுக்கு 100% திருப்தியை ஏற்படுத்தும். நாயகி தாரா பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளார். ஆனால் அந்த அளவிற்கு அவரின் நடிப்பு இல்லை.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

மொட்டை ராஜேந்திரன், மனோகர் என பலர் இணைந்தது படம் முழுவதையும் காமெடிகளால் நிரப்பு விட்டனர்.

தொழில்நுட்பம் :

இசை :

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை பிரமாதம்.. பாடல்கள் பரவாயில்லை ரகம்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு சிறப்பு, லியோ ஜான் பாலின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் :

ஜான்சன் தமிழ் சினிமாவிற்கு புளித்து போன கதையை கையிலெடுத்திருந்தாலும் காமெடி கலந்த திரைக்கதைகளால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து படத்தை ஜெயிக்க வைத்து விட்டார்.

தம்ப்ஸ் அப் :

1. சந்தானத்தின் நடிப்பு
2. படத்தின் காமெடி
3. வித்தியாசமான திரைக்கதை

தம்ப்ஸ் டவுன் :

1. காமெடி படம் என்பதால் படத்தில் லாஜிக்கெல்லாம் பின்பற்றவில்லை.

மொத்தத்தில் அக்கியூஸ்ட் No 1 நம்பி செல்பவர்களுக்கு நல்ல என்டர்டைன்மெண்ட்.

REVIEW OVERVIEW
A1 விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
a1-movie-reviewமொத்தத்தில் அக்கியூஸ்ட் No 1 நம்பி செல்பவர்களுக்கு நல்ல என்டர்டைன்மெண்ட்.