சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.

சந்தானத்துடன் மேகா ஆகாஷ், மொட்ட ராஜேந்திரன், எம் எஸ் பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.

படத்தின் கதைக்களம் :

சிறு வயதில் பானை செய்து விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனாக வடக்குப்பட்டி ராமசாமியை காட்டுகின்றனர். ஆனால், பானையை யாருமே வாங்கவில்லை. இதனால் வறுமையில் வாடும் வடக்கு பற்றிய ராமசாமி தனது நிலத்தில் ஒரு கோவிலை கட்டி மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி சம்பாதிக்க தொடங்குகிறான்.

இதே ஊருக்கு வரும் தாசில்தார் இதைவிட அதிகமாக சம்பாதிக்க சந்தானத்துடன் டீல் பேச அதற்கு சந்தானம் மறுப்பு தெரிவித்து விடுகிறார். இதனால் அடுத்து நடந்தது என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

YouTube video

படத்தைப் பற்றிய அலசல் :

எப்போதும் கவுண்டர்களில் மாஸ் காட்டும் சந்தானம் கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளார்.

மேகா ஆகாஷ் அங்கும் இங்குமாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலையை காட்டுகிறார். சந்தானத்துடன் வரும் மாறன், சேஷீ ஆகியோரின் கூட்டணி பட்டய கிளப்பியுள்ளது.

ஜான் விஜய், ரவி மரியா ஆகியோர் ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் போல காட்டியுள்ளனர். அதில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் உள்ளன.

கிளைமேக்ஸ் இல் வரும் மொட்டை ராஜேந்திரனின் காமெடி கலக்கல்.

இயக்குனர் காமெடியான கதை களத்துடன் படத்தைக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார். ‌ ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருக்கலாம்.

REVIEW OVERVIEW
வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்!
vadakkupatti-ramasamy-movie-reviewமொத்தத்தில் வடக்குப்பட்டி இராமசாமி ‌ஒருமுறை பார்க்கலாம்.