குணசேகரன் முகத்தில் கரியை பூச உள்ளார் தர்ஷினி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பதை குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்றைய எபிசோடில் குணசேகரன் மருமகள்கள் கல்யாணம் நடக்கும் மண்டபத்தை தேடி கண்டுபிடித்து வர குணசேகரன் அவர்களை உள்ளே விடக்கூடாது என்று தடுப்பதற்கான வேலைகளில் இறங்கினார். இன்னும் அரை மணி நேரத்தில் இந்த கல்யாணத்தை முடிக்கணும் என்று ஐயரிடம் சொன்ன சித்தார்த் பாட்டி செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் சரியா செய்து கல்யாணம் பண்றதா இருந்தா இந்த கல்யாணம் நடக்கட்டும், இல்லன்னா நாங்க கிளம்பி போயிட்டு இருக்கோம் என்று அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டு மருமகள் தடைகளை தாண்டி ஏணி போட்டு மண்டபத்துக்குள் ஏறி போலீசுடன் வந்து கல்யாணத்தை நிறுத்தி முதல் முறையாக தங்களது வெற்றியை பதிக்கின்றனர்.
குணசேகரனை எதிர்த்து இவர்கள் முதல்முறையாக வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பமாக பார்க்கப்படுகிறது.