அப்பாவாக போவதை மறைமுகமாக சொல்லி பல்பு வாங்கியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு வந்திருக்கேன் அவரது அம்மா வீட்ல விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க இன்னும் இல்ல கோபி சொல்றதா சொல்லி இருக்காரு என்று கூறுகிறார். அவர் சொல்ற ஐடியாவுல இருக்காரா இல்ல நான் வந்து சொல்லவா என்று கேட்க இல்லை வேண்டாம் அவரே சொல்லுவாரு என்று ராதிகா சொல்லிவிட மயூ ஓடி வந்து ராதிகாவை பிடித்துக் கொள்கிறார்.
பிறகு கமலா அம்மா நைசாக பேசி ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மயூவிடம் சொல்ல அவர் மிகுந்த சந்தோஷப்படுகிறார். அதன் பிறகு வீட்டில் பாக்கியா ஊறுகாய் செய்து கொண்டிருக்க ராதிகா டிபன் கேரியருடன் வருகிறார். ஈஸ்வரி இது என்ன ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கிட்டு வரியா எந்த ஓட்டல்ல கேரியரில் சாப்பாடு தராங்க என்று கேட்க ராதிகா இல்லை இது எங்க அம்மா சமைச்சு கொடுத்தது என்று சொல்கிறார்.
ஊறுகாயை பார்த்ததும் ராதிகாவுக்கு நாக்கில் எச்சி ஊர இது ஊறுகாய் தானே என்று கேட்டு நான் கொஞ்சம் எடுத்துக்கவா என்று எடுத்துக் கொள்கிறார். சாப்பிட்டு பார்த்து சூப்பரா இருக்கு என்று சொல்கிறார். அதன் பிறகு ஈஸ்வரி தமாத்துண்டு கேரியர்ல இவளுக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வந்திருக்க அப்போ கோபி என்ன சாப்பிடுவான்? என்று புலம்புகிறார் ஈஸ்வரி.
பிறகு பாக்யாவிடம் ஏன் பாக்யா நீ ஒன்னு பண்றியா என்று சொல்ல என்ன அத்தை சொல்லுங்க என்று கேட்க அப்படியே கோபிக்கும் சேர்த்து சமைக்கிறியா என்று சொல்ல பாக்கியா கோபப்படுகிறார். சரி சரி நீ ஒன்னும் சமைக்க வேண்டாம் வீட்ல பிரச்சனை வேண்டாம் என்று எழுந்து ஓடுகிறார் ஈஸ்வரி. பாக்கியா என்ன பாத்தா என்ன இளிச்சவாய் மாதிரி இருக்கா என்று எழிலிடம் கோபப்படுகிறார்.
மேலே செழியன் மற்றும் எழில் என இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த கோபி என்னடா சரக்கா என்று கேட்க இல்லப்பா ஜூல்ஸ் என்று சொல்ல நம்பாமல் எடுத்து குடித்து டெஸ்ட் செய்கிறார். அதன் பிறகு தன்னுடைய பெஸ்ட் பிரண்டுக்கு காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிற பொண்ணு ஒன்னு இருக்கு இப்போ இன்னொரு குழந்தை பிறந்து இருக்கு என்று சொல்ல எனில் அதில் என்ன இருக்கு நல்ல விஷயம் தான் என்று சொல்ல கோபி சந்தோஷப்பட செழியன் கேட்கவே கன்றாவியா இருக்கு என்று பல்பு கொடுக்கிறார். இதனால் கோபி தன்னுடைய விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறார்.
அதன் பிறகு கீழே வர ராதிகா மயூ கிட்ட விஷயத்தை சொன்னோம் ரொம்ப சந்தோஷப்பட்டா என்று சொல்கிறார். கோபி பசங்க கிட்ட மறைமுகமாக சொல்ல முயற்சி பண்ணேன். எழில் இதில் என்ன இருக்கு நல்ல விஷயம் தானே என்று சொன்னால் மண்டையில அப்படியே ஒரு பவர் ஃபுல்லான பல்பு எரிந்தது. ஆனா செழியன் கேட்கவே கன்றாவியா இருக்குன்னு சொல்லி அந்த பல்பை உடைத்து விட்டான் என்று புலம்புகிறார்.
ஒரு நல்ல நேரமா பார்த்து அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிடுறேன் என்று கோபி சொல்கிறார். அதன் பிறகு ராதிகா விஷயத்தை சொல்லிட்டு நாம இங்கே இருக்க வேண்டாம் நம்ம வீட்டுக்கு போயிடலாம் அப்படி இல்லன்னா கொஞ்சம் தூரமா போயிடலாம் என்று சொல்ல இதுவும் நல்லா ஐடியா தான் என்று கோபி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.