சிறகடிக்க ஆசை நடிகைகளுடன் இணைந்து கில்லி படம் பார்த்துள்ளார் மீனா.
Sirakadikka Aasai Meena in Ghilli Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பாலகுமாரன்.
வேலைக்காரன் என்ற சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகமான இவர் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் நல்ல வரவேற்பை பற்றி தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சீரியலிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மீனா தற்போது சிறகடிக்க ஆசை ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோருடன் இணைந்து நைட் டைமில் தியேட்டரில் கில்லி படம் பார்த்து என்ஜாய் செய்துள்ளார்.
இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட விஜய் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்