முத்துவால் சிக்கியுள்ளார் ஜீவா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாஸ்போர்ட் ஏஜென்சிக்கு வந்த ஜீவாவிடம் உங்களை பத்தி டிடைல்ஸ் கேட்டு இரண்டு பேர் வந்தாங்க. பேர் மனோஜ்-னு சொன்னாங்க என்று சொல்ல ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.
எதாச்சும் சொன்னீங்களா என்று கேட்க ஏஜென்சியில் வேலை பார்க்கும் பெண் இல்லை என்று சொல்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பி செல்லும் போது தனது தோழிக்கு போன் போட்டு வழக்கமாக போகும் பியூட்டி பார்லர் குறித்து விசாரிக்க அதை க்ளோஸ் பண்ணிட்டாங்க என்பது தெரிய வருகிறது.
இதை கேட்ட முத்து எனக்கு தெரிந்த பார்லர் ஒண்ணு நுங்கம்பாக்கத்தில் இருக்கு என்று சொல்கிறார். லேடிஸ் பார்லரா? நல்ல பார்லரா? என்று விசாரிக்கும் ஜீவா சரி அங்கேயே போங்க என்று சொல்ல முத்து பார்லருக்கு கொண்டு வந்து விடுகிறார். மறுபக்கம் பூவை கொண்ட வந்த மீனா நோ பார்க்கிங்கில் வண்டியை விட போலீஸ் வண்டியை எடுத்து சென்று விடுகிறார்கள்.
பார்லரில் ஜீவாவை பார்த்த ரோகினி அதிர்ச்சி அடைகிறார். அவரிடம் பேசி அது ஜீவா தான் என்பதை உறுதி செய்து கொண்டு மனோஜ்க்கு தகவல் கொடுக்க மனோஜ் அங்கு வந்து ஜீவா பின்னால் நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க ரோகினி கத்தரி கோலை காட்டி மிரட்டி உட்கார வைக்கிறார். பிறகு மனோஜ் பணத்தை கேட்க 6 மாசம் உன் கூட இருந்ததுக்கு சரியா போச்சு, பணத்தை எல்லாம் கொடுக்க முடியாது என சொல்ல ரோகினி போலீஸ்க்கு போன் செய்து வர வைக்க ஜீவா முதலில் இவங்க என்னை மிரட்டி பணத்தை வாங்க பார்க்குறாங்க என சொல்கிறார்.
போலீஸ் 6 மாசம் முன்னாடியே உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க என சொல்லி விசாரிக்க கூப்பிட என்கிட்ட பணத்தை கேட்டு மிரட்டுறீங்கனு சோசியல் மீடியாவில் வீடியோ போடுவேன் என்று மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.