சசி-விஜய் ஆண்டனி மீண்டும் இணையும் புதிய படம் ‘நூறுசாமி’..

Web Ads

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சக்தித்திருமகன்’ படம் செப்டம்பர் 19-தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.

சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஆழமான அரசியல் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வைரலாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இந்தப் படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

இதனை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு மே 1-ந்தேதி வெளியீடு எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய் ஆண்டனியுடன் லிஜோ மோல் ஜோஸ், ஸ்வாசிகா உள்பட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்கு முன்னதாக ஜோஸ்வா சேதுராமன் இயக்கி வரும் ‘லாயர்’, ‘எமகாதகி’ இயக்குநர் பெப்பின் இயக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.

sasi and vijay antony to team up for noorusaami
sasi and vijay antony to team up for noorusaami