செருப்பு அணியாமல் இருப்பது ஏன்? விஜய் ஆண்டனி விளக்கம்..!

செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தை விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

actor vijay antony latest speech viral
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்துபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பிரபலமான இவர் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தற்போது இயக்குனர் லியோ ஜான் பால் மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவர் சமீபமாக காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் நடந்து வருகிறார். இதை குறித்து கேட்டபோது அவர் செருப்பு கழற்றி வெறும் காலுடன் நடக்கும்போது மனது நிறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார் இது மட்டும் இல்லாமல் ஏசி காற்று உறக்கம், பங்களா வீடு என ஆடம்பரம் நம்முடனே ஒட்டி இருக்கிறது. அதை விட முடியாது எனவே இதுபோன்று செருப்பு அணியாமல் என்னை ஈடுபடுத்தி என் மனதை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay antony latest speech viral