விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

Web Ads

ரீ ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் படங்கள் பற்றிப் பார்ப்போம்..

விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் ஹெச். வினோத் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் ‘கில்லி’ பிடித்திருந்தது.

தொடர்ந்து விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய்யின் மற்ற வெற்றிப் படங்களை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

அவ்வகையில் 2000-ம் ஆண்டு விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘குஷி’ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டு விஜய், அசின் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ படமும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் என ஏ.எம்.ரத்னம் அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

kushi and sivakasi re relase producer am ratnam announced