மரணிக்கச் செல்லும் இளைஞன் முன்னே ஒரு தேவதை: மிஷ்கின் விடும் கதை..

முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதையொன்று காண்போம்..

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’. ஸ்ருதிஹாசன் ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

தற்போது படத்தின் ஷூட் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் மிஷ்கின். இந்நிலையில், படத்தின் கதை பற்றித் தெரிவிக்கையில்,

‘டிரெயின்’ படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை. ஒரு ராட்சதப் புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளை வயிற்றில் சுமந்துகொண்டு தவழ்ந்து தவழ்ந்து சென்று பத்திரமாக வெளியே விடுகிறதோ. அதேமாதிரி தான் ‘டிரெயின்’ படத்தின் கதையையும் எழுதி இருக்கிறேன்.

கதை என்னவென்றால், வாழவே விருப்பம் இல்லாத கதாநாயகன், மரணத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த ரயில் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்’ என்றார்.

இதற்கு இணையவாசிகள் ‘இப்படி ஒரு வெளிப்படையான டைரக்டரா? படமும் நிச்சயம் ஃபீல் குட் படமாக இருக்கும்’ என கூறி வருகின்றனர். இப்படத்தில், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், கலையரசன், யூகிசேது, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

vijay sethupathi act in train movie story update
vijay sethupathi act in train movie story update