அழகாக இருந்தால் திமிர் இருக்குமா?: சுஹாசினி பற்றி பார்த்திபன் பேச்சு..
50 வயதிலும் வரும் வெட்கம் பேரழகானது. அப்படியொரு நிகழ்வு காண்போம்..
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து மேலும் தனி முத்திரை பதித்தது தெரிந்ததே.
பார்த்திபன் என்றாலே இயக்கம் மற்றும் நடிப்பு, பேச்சிலும்
தனித்துவம் நிறைந்தவர் தான். அதேபோல, வலைத்தள பதிவுகளிலும் ஏதாவதொரு வித்தியாசத்தை வைத்துவிடுவார். அது பாராட்டையும் பெற்றிருக்கிறது. ட்ரோல்களையும் சந்தித்திருக்கிறது.
இந்நிலையில் வரலட்சுமி, சுஹாசினி உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா ஷங்கர் இயக்கியிருக்கும் ‘தி வெர்டிக்ட்’ என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில்,
‘சுஹாசினிக்கு, தான் அழகு என்கிற திமிர் அதிகம். எந்த ஒரு பெண்ணும் 28 வயதுக்கு மேல் தன்னுடைய வயதை வெளியே சொல்லமாட்டார். ஆனால், இவரோ எனக்கு போன் செய்து பார்த்திபன் எனக்கு 50 வயது என்று சொல்வார். 50 வயதிலும் தான் எவ்வளவு அழகு என்ற திமிர் அவரிடம் இருக்கிறது.
எனக்கு மணிரத்னம் மேல் காதல். மணிரத்னத்துக்கு சுஹாசினி மீது காதல்’ என்றார்.
இந்த பேச்சுக்கு 50 வயதிலும் சுஹாசினி கொண்ட வெட்கம் அளவற்றது. இந்நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.
