வனிதா இயக்கிய ‘சுபமுகூர்த்தம்’ பாடல் நாளை வெளியீடு: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்
வனிதா இயக்கிய திரைப்படத்தின் பாடல் நாளை வெளியாகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் பிரபலமான நிலையில், தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ்’ படத்தின் சுபமுகூர்த்தம் பாடல் நாளை வெளியாகிறது.
3 முறை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் வனிதா அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா? என்கிற கேள்விகளை கிளப்பும் வகையில் அவரது அடுத்த படமான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ்’ உருவாகி வருகிறது.
மணக்கோலத்தில் திருமண மேடையில் பட்டுச்சேலை அணிந்து வெட்கப்புன்னகையுடன் வனிதா உட்கார்ந்திருக்கிறார். மணமகன் கோலத்தில் ஜம்முன்னு உட்கார்ந்திருக்கிறார் ராபர்ட் மாஸ்டர்.
ஏற்கனவே வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் காதலித்து பிரிந்த நிலையில், மீண்டும் இவர்கள் இணைந்து நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
வனிதா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ரமேஷ் வைத்தியா இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவாகியுள்ள ‘சுப முகூர்த்தம்’ பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5.55 மணிக்கு வெளியாக உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வனிதா வெளியிட்டுள்ளார்.
வனிதா பட போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அவரை கலாய்க்கும் விதமாக ‘வாழ்த்துக்கள் வனிதா அக்கா, அடுத்த திருமணத்துக்கு ரெடியாகிட்டீங்க போல’ என்றும் 60-ம் கல்யாணமா? என்றும் கலாய்த்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
ரீல் திருமணம் சீக்கிரமே ரியல் திருமணமாக வாழ்த்துக்கள்’ என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
