சூர்யா-ஜோதிகா வைத்த விருந்தில், நடிகைகள் செம குஷி
சூர்யா-ஜோதிகா வைத்த விருந்தில் திரிஷா கலந்து கொண்ட நிகழ்வு காண்போம்..
நட்சத்திர காதல் தம்பதியினர் சூர்யா-ஜோதிகா வீட்டு விருந்தில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா கலந்துகொண்டனர்.
இவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. சூர்யா வீட்டு விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும், விருந்தோம்பலை பாராட்டியுள்ளனர். உணவும் அருமையாக இருந்தது. இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய சூர்யா-ஜோதிகா இருவருக்கும் நன்றி’ என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளனர்.
சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக ‘ஆறு’ படத்திற்கு பிறகு- 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிஷா இணைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, திரிஷா ‘தலையில் பூ வைத்தபடி’ வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு நிச்சயதார்த்தம் ஆனதா? என கேள்வி எழுப்பினர். இல்லை, அது, சூர்யா வீட்டு பார்ட்டியில் கலந்துகொண்டதால், எடுக்கப்பட்ட ‘நியூ லுக்’ என தெரிகிறது.