கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து இசையமைப்பாளர் யுவன் விலகல்; அவருக்கு பதில் இவர்
சர்தார்-2 பட இசையமைப்பாளர் மாற்றம் பற்றிக் காண்போம்..
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில், அவருக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். முன்னதாக, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்படத்தில் இருந்து யுவன் திடீரென விலகியுள்ளார்.
இதனால், அவருக்கு பதில், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதுதவிர, அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள ‘கைதி 2’ படத்திற்கும் சாம் சி.எஸ் தான் இசையமைக்க உள்ளார்.
குறிப்பாக, எந்த படத்திலிருந்து இசையமைப்பாளர் விலகினாலும் சாம் சி.எஸ்-க்கு அந்த வாய்ப்பு சென்றுவிடுகிறது. அண்மையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘புஷ்பா 2’ பட பாடல்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், பின்னணி இசை அமைக்கும் பணியின்போது தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து சாம் சி.எஸ் தான் ‘புஷ்பா 2’ படத்திற்கு பின்னணி இசையமைத்தார்.
சாம் சி.எஸ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.