‘ஆராத்யா’ போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ராம் கோபால் வர்மா வாய்ஸ்
சோஷியல் மீடியா மற்றும் பெண்களின் நிலை பற்றி அலசும் ‘சாரி’ திரைப்பட அப்டேட் பார்ப்போம்..
ரவிசங்கர் வர்மா தயாரிப்பில், இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் பற்றி நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், ‘நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது.
நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் ராமுக்கு நன்றி’ என்றார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவிக்கையில், ‘ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான்.
சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது’ என்றார்.