நடிகரான பிருத்விராஜுக்கு, இந்த கதைத்தல் தேவையா?: வைரலாகும் பதிவுகள்

மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படத்தின் புதிய வெர்ஷன் பற்றிப் பார்ப்போம்..
பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம், லூசிஃபர் படத்தை போன்று இல்லையென விமர்சிக்கப்பட்டாலும், மலையாள சினிமாவில் 3 நாளில் 150 கோடி வசூல் செய்துள்ள முதல் படம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
‘எம்புரான்’ படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்தபிறகு தான் படமே ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனாலும், இப்படத்தில் சில காட்சிகள் சர்ச்சையாகி உள்ளன. இந்துக்களை மோசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘எம்புரான்’ படத்திலிருந்து 17 காட்சிகளை நீக்குவது அல்லது திருத்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தில் கர்ப்பிணி மற்றும் சிறுவர்களை கொடூரமாக கொலை செய்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால், இப்படத்தில் இருக்கும் 17 காட்சிகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருக்கிறது. 17 காட்சிகளும் நீக்கிய பின்பு மீண்டும் ஏப்ரல் 2 முதல் எம்புரானின் புதிய வெர்ஷனை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
மோகன்லால் நடிப்பு பிரமாதப்படுத்தியிருந்தாலும் கதையில் சுவாரஸ்யம் இல்லை என கூறப்படுகிறது. 17 காட்சிகளை நீக்கிய பின்பாவது படத்தில் சுவாரஸ்யம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக இணையவாசிகள் ‘நடிகரான பிருத்விராஜுக்கு, படம் இயக்க வேறு கதை தோன்றவில்லை போலும்’ என கருத்து பதிவிடுவது வைரலாகி வருகிறது.