கோபப்பட்ட சூர்யா, அர்ச்சனா போட்டோ திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial promo update 30-03-25
moondru mudichu serial promo update 30-03-25

நேற்றைய எபிசோடில் சூர்யா ரேணுகாவிடம் லேப்டாப் சார்ஜர் போட சொல்லி ரூமுக்கு கொடுத்து விட ரேணுகாவும் சார்ஜர் போடுகிறார்.கரெக்ட்டாக அந்த நேரம் பார்த்து போன் பண்ணி என்னாச்சு என்று கேட்க அதற்குள்ள வீடியோ ஆப் ஆயிடுச்சு என்று அர்ச்சனாவிடம் சொல்ல அதுக்குள்ள அதை எப்படியாவது டெலிட் பண்ணனும் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார், நான் சொல்ற மாதிரி செய் என்று சொல்லி ஆன் பண்ண சொல்லுகிறார்.

பிறகு பாஸ்வோர்ட் கேட்கிறது என்று சொல்ல என்ன பாஸ்வேர்ட்டா இருக்கும் என்று அர்ச்சனா யோசித்து சூர்யா என்று போட்டுப் பாரு என்று சொல்லி ஸ்பெல்லிங் சொல்ல அது தப்பாக இருக்கிறது. உடனே அர்ச்சனா அடுத்தடுத்து பாஸ்வேர்ட்களை சொல்ல எல்லாம் தப்பாக வருகிறது. நீங்களே வந்துடுங்க என்று ரேணுகா சொல்ல, அர்ச்சனா அவங்க வரத்துக்குள்ள அதை டெலிட் பண்ணனும் என்று சொல்ல, அவருக்கு புடிச்சது ஏதாவது இருக்கும் என்று ரேணுகா சொல்ல அவனுக்கு புடிச்சது ஆல்கஹால் தான் அந்த ஸ்பெல்லிங் ஐ போடு என்று சொல்ல உடனே ஓபன் ஆகிறது. அர்ச்சனா வீடியோ காலில் வந்து டெலிட் ஆல் கொடு என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்குள் நந்தினி வந்து நீ என்ன இங்க பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க, சார்ஜர் போட்டுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல நீங்க போங்க நான் எடுத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார் ரேணுகா.ஆனால் நந்தினி நீ போ நான் பாத்துக்குறேன் என அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி கூப்பிட்டு நந்தினியை கடத்திய விஷயத்தைப் பற்றி பேசுகிறார். நந்தினி சொன்னத யாரும் நம்பலைன்னு எனக்கு தெரியும் சூர்யா ரெசார்டில் புட்டேஜ் கேட்டு வாங்கி இருக்கான் சார்ஜர் போட்டு வந்த உடனே கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்ல அதை எதுக்கு நான் பாக்கணும் என்று கேட்கிறார். அதற்கு அருணாச்சலம் நந்தினி மேல தேவையில்லாத பழி வருது இல்ல அதனால தெரிஞ்சுக்கலாம் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அர்ச்சனா வீட்டுக்கு வர இவ எதுக்கு தேவையில்லாம அடிக்கடி நம்ம வீட்டுக்கு வரா என்று கோபப்படுகிறார். ரெசார்ட் போனால் அங்க வரா வீட்ல இங்க வரா இவளுக்கு என்ன வேணும் என்று கேட்க அர்ச்சனா நீதான் வேணும் சூர்யா என்று மனதில் நினைக்கிறார். ஒரு கம்பெனியில நம்மளுக்கு ஒரு ஆஃபர் கிடைச்சு அது நம்மளுக்கு கிடைக்கிற நேரத்துல வேற ஒருத்தருக்கு போயிடுச்சுன்னா நீங்க அந்த கம்பெனி பக்கம் திரும்பி பார்ப்பீங்களா ஆனா இவளுக்கு அந்த மாதிரி எதுவுமே கிடையாது எந்த வெட்கமும் இல்லாம நேரடியா வந்து நிற்கிறா என்று பேசிக்கொண்டே போக, அருணாச்சலம் பாவம் கஷ்டப்படும்படி பேசாத என்று சொல்ல நீங்க தான் அப்படி நினைக்கிறீங்க ஆனா அவளுக்கு அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது என்று சொல்லுகிறார்.

உடனே அர்ச்சனா பரவாயில்லையே சூர்யா என்ன பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க எனக்கு புருஷனா வரப்போற இல்ல அப்ப எல்லாத்தையும் சேர்த்து வைத்து பாத்துக்குறேன் என்று மனதில் நினைக்க, அருணாச்சலம் அவர் பேசறதெல்லாம் தப்பா நினைச்சுக்காதம்மா என்று சொல்லுகிறார். நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டு எல்லாரும் போல சந்தோஷமா வாழனும் என்று சொல்ல உடனே சூர்யா இவளா, நல்லபடியா வாழ்வாளா காமெடி பண்ணாதீங்க சிரிப்பு வருது என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி நீ எதுக்காகமா வந்திருக்க பொக்கேவோட என்று கேட்க நேத்து சுரேகாவோட பர்த்டே என்று கேள்விப்பட்டேன் அதுக்காக விஷ் பண்ண வந்தேன் என்று சொல்ல நீ போய் மேல பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

வேகவேகமாக மேலே வந்த அர்ச்சனா ரேனுகாவிடம் டெலிட் பண்ணிட்டியா என்று கேட்க அதுக்குள்ள நந்தினி வந்துட்டா என்று சொல்லுகிறார். இதுவரைக்கும் யாரும் ஃபுட்டேஜை பார்க்கலல்ல என்று சொல்ல, இல்லை யாரும் பார்க்கவில்லை என்று ரேணுகா சொல்லுகிறார் அர்ச்சனா ரேணுகாவிடம் டென்ஷனாக பேசிக் கொண்டிருப்பதை சுரேகா மற்றும் மாதவி கவனித்து விடுகின்றனர். மாதவி இவ எதுக்கு அடிக்கடிக்கு இங்க வரா அதுவும் இல்லாம ஏதோ பல நாள் பழக்கம் மாதிரி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க என்று யோசிக்கின்றனர்.

உடனே இவர்கள் இருவரும் அர்ச்சனாவிடம் வந்து என்ன விஷயம் அடிக்கடி இங்க வர என்று கேட்க அதற்கு சுரேகா பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தேன் என்று சொல்லி லேட்டடு விஷ்ஷஸ் என்று சொல்லி வாழ்த்துகிறார். மாதவி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க அர்ச்சனா நான் போய் நந்தினி பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு வரேன் என்று கிளம்ப உடனே அர்ச்சனா கையில் இருக்கும் வளையலை கவனித்து விடுகிறார். இந்த வளையல் ஒரு கையில் மட்டும் போட்டு இருக்கேன் இன்னொரு கையில எங்கே என கேட்க இது எங்க அப்பா ஆசை ஆசையாய் வாங்கி கொடுத்தது ஒன்னு தொலைஞ்சிடுச்சு அதனால இதே மாதிரி ஆர்டர் பண்ணி இருக்கோம் என்று சொல்ல நீ எதுக்குகா வளையல் பத்தி விசாரிச்சா என்று சொல்ல சூர்யா ரூம்ல இருந்த ஒரு வளையலும் இதே மாதிரி இருந்துச்சு இத பத்தி நம்ம டீடைலா கண்டுபிடிக்கணும் என்று சொல்லுகிறார். அர்ச்சனா நந்தினி ரூமுக்கு வந்து பேச்சு கொடுக்க அங்கிருக்கும் லேப்டாப்பை கவனிக்கிறார்.

உன்ன பாக்கணும் போல இருந்துச்சு அதனால உடனே வந்துட்டேன் என்று சொல்ல, நிஜமாக என்ன பாக்க தான் வந்தீங்களா என்று கேட்க நான் ஊருக்கு கார பொண்ணு என்ன பாக்க யார் வருவார்கள் என்று நினைத்தேன் என்று சொல்ல நான் இதுக்காகவே அடிக்கடிக்கு வரேன் என்று சொல்லி லேப்டாப் பக்கத்தில் உட்கார்ந்து ரெசார்ட் அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்க சூப்பராக இருந்தது என்று சொல்ல அதற்கு அர்ச்சனா எனக்கு புடிக்கல என்று மனதில் நினைக்கிறார். அப்புறம் ரெசார்ட்டில் உன்ன கடத்தினவங்கள பத்தி தெரிஞ்சுதா என்று கேட்க அந்த வீடியோவை பார்க்கும் போது தான் சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடுச்சு என்று சொல்கிறார். நீங்க மட்டும் அன்னைக்கு வந்து என்ன காப்பாத்தலைன்னா நான் என்ன ஆயிருப்பேனோ தெரிஞ்சிருக்காது என்று பேசிக்கொண்டே பென்டிரைவ் எடுக்க ட்ரை பண்ணுகிறார் அதற்குள் நந்தினி திரும்பிவிட அமைதியாக இருக்க செகண்ட் அட்டெம்ப்டில் பென்டிரைவை எடுத்து விடுகிறார் அர்ச்சனா. உடனே சூர்யா என்னாச்சு நந்தினி சார்ஜர் ஏறுச்சா என்று கத்த பதற்றத்தில் அர்ச்சனா கையில் இருக்கும் பென்டிரைவ் கீழே விழுந்து விடுகிறது. உடனே நந்தினி லேப்டாப் எடுத்துக்கொண்டு வந்து சூர்யாவிடம் கொடுக்க இதுல சொருவி இருந்தது எங்கே என்று கேட்க நந்தினி கொடுக்கிறார் இது இதுலதான இருந்தது யார் எடுத்தது என்று கேட்க கீழே விழுந்துட்டு இருந்தது என்று சொல்லுகிறார். கீழே விழுந்து டேமேஜ் ஆயிருந்தா வராது என்று சொல்லி சூர்யா லேப்டாப்பில் போட்டு செக் பண்ண அருணாச்சலம் குடும்பத்தினர் அனைவரையும் கூப்பிட்டு நிறுத்துகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியிடம் பார்த்து சொல்லு என்று சொல்ல அதற்குள் லேப்டாப் மீது காபி கொட்டி விடுகிறது. சூர்யா நந்தினியிடம் அவளை இங்கு வராத வராதுன்னு சொன்னா இலித்துக்கொண்டு வந்து நிக்கிறா என்று கோபப்படுகிறார்.

எல்லா பிரச்சனைக்கும் அவங்க தான் காரணம் என்று நினைக்கிறார். மறுபக்கம் சூர்யா குடித்துக்கொண்டு அந்த அர்ச்சனா நல்லவ கிடையாது என்று சொல்ல, அவங்கள நம்பக் கூடாதுன்னு சொல்ற சூர்யா சாருக்கு என்னோட பதில் என்ன என்று நந்தினி நினைக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 30-03-25
moondru mudichu serial promo update 30-03-25