Web Ads

அன்பானவர்களின் மன உளைச்சலுக்காக வருந்துகிறோம்: ‘எம்புரான்’ மோகன்லால்

Web Ad 2

‘எம்புரான்’ பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார் மோகன்லால். இது பற்றிய தகவல்கள்..

மோகன்லால் நடித்து வெளியான ‘எம்புரான்’ படத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி, வலைத்தளங்களில் எதிர்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில் அத்தகைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் வருத்தம் தெரிவித்து மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில்,

‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தில் உள்ள சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருள்கள், என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிந்தேன்.

ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக்குழு மீது வெறுப்பு உருவாகாமல் பார்த்துக் கொள்வது எனது கடமை.

அதனால், எம்புரான் குழுவினரும் நானும் எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனமார்ந்த வருந்துகிறோம். மேலும், அதற்கான பொறுப்பு படத்தின் பின்னணியில் பணியாற்றிய நம் அனைவரின் மீதும் உள்ளது என்பதை உணர்ந்து கொள்கிறோம். சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து நிச்சயமாக நீக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, நான் எனது திரைப்பட வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும்தான் என் ஒரே பலம்’ என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார். இதனால் ‘எம்புரான்’ படம் புதிய வெர்ஷனாக சில தினங்களில் வெளியாகிறது.

empuraan movie 17 scenes removed and mohanlal explain