மிரட்டலான வில்லன் ரவிமோகனா? ஜெயராமா? வெயிட்டிங்
ரவிமோகனை தொடர்ந்து, ஜெயராமும் வில்லனாக வருகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர் தற்போது ‘இட்லி கடை, குபேரா மற்றும் பாலிவுட்டில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டாக, மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் வில்லனாக வருகிறார்; அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைகிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னதாக, மலையாளத்தில் வெளியான ‘ஆப்ரகாம் ஓஸ்லர்’ என்ற படத்தில் ஜெயராமின் புதிய பரிமாண நடிப்பு அனலாய் தெறித்து பேசப்பட்டது.
ஷாஃப்ட் ரோலில் பல படங்களில் ஹீரோவாக நடித்த ரவிமோகன் தற்போது ‘பராசக்தி’ படத்தில் எஸ்கேவுக்கு வில்லன் ஆகியுள்ளார். அதுபோல, தனுஷுக்கு வில்லனாக வேற லெவலில் ஜெயராம்.! பார்க்கலாம், இருவரில் மிரட்டலான வில்லன் யாரென.!