பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து விஜய் கடும் விமர்சனம்

விஜய்யின் இன்றைய அரசியல் பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள்..
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளார். அரசியல் பேசும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க, பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். தேர்தலை முன்னிட்டு இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து விஜய் பேசியதாவது :
‘நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தி இருந்தீர்கள் என்றால், பெண்கள் பாதுகாப்பு ஒழுங்கா இருந்திருக்கும், சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும்.
இங்க பெண்களுக்கு நடக்குற கொடுமைகளை சொல்ல முடியல. இதுலவேற உங்கள அப்பானு வேற கூப்பிடுறாங்கனு சொல்றீங்க. தினம் தினம் உங்களுடைய இந்த கொடுமைகளை அனுபவிச்சு வர்ற என்னோட சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கே ஒரு முடிவு கட்டப்போறாங்க’ என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசுகையில், ‘இங்க தான் இப்படி என்றால் அங்க அவுங்க… உங்க சீக்ரெட் ஓனர், அவங்க உங்களுக்கும் மேல, மாண்புமிகு திரு மோடி ஜீ அவர்களே.
என்னம்மோ உங்க பெயரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு பயம் மாறியும், நான் படத்துல லியோவ பாக்கணும்… லியோவ பாக்கணும்னு சொல்ற மாதிரி; நீங்க பெயரை சொல்லணும்னு அடம்பிடிக்கிறீங்க… நீங்க தான் கேட்டீங்க அதான் இப்போ சொல்லிட்டேன் வச்சிக்கோங்க.
‘ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக அரசியல் கூட்டணி’ என உங்க பெயரையே சொல்லி மக்களை ஏமாற்றுவதும், பயமுறுத்துவமா இருக்காங்க.
இப்படி மறைமுகமாக இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி… தமிழ்நாடுன்னா உங்களுக்கு அலர்ஜி என கேள்வி எழுப்பி உள்ளார் விஜய்.
டீ லிமிட்டேஷன் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்களில் கை வைக்கப் பார்க்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல்னு நீங்க ஸ்டார்ட் பண்ணப்பவே புரிஞ்சிடுச்சு பிரதமர் சார்.
உங்களிடம் நாங்க சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமா கையாளுங்கள் சார். ஏன்னா தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்ன மாநிலம்’ என்றார்.
தற்போது விஜய் பேசிய இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல பதிலடியாய் மீம்ஸ்களும் எதிர்பார்க்கலாம். வேற வேலை.. அதானே தொடர்கிறது..!