வீட்டுக்கு வந்த அர்ச்சனா, கடுப்பான சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மினிஸ்டர் போனில் பேசிக் கொண்டிருக்க அர்ச்சனாவின் அம்மா வந்தவுடன் அர்ச்சனா என்ன பண்றா என்று கேட்க எப்ப பாத்தாலும் அந்த பையன பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கா என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மினிஸ்டரை பார்க்க இரண்டு பேர் வருகின்றனர். என்ன விஷயம் என்று கேட்க பொண்ணுக்கு கல்யாணம் வைத்திருப்பதாக சொல்லி பத்திரிக்கை வைக்க தாம்பூலம் தட்டு தயார் செய்து கொடுக்கின்றனர். உங்களுக்கு தான் முதல் பத்திரிக்கை தரேன் உங்க கையால தாலி எடுத்துக் கொடுத்தாதான் என் பொண்ணு நல்லா இருப்பா என்று சொல்லுகிறார். உடனே மினிஸ்டர் கண்டிப்பா வரேன் என்று சொல்ல அவர்கள் அவசியம் எல்லோரும் வந்துருங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள் வந்தவரின் மனைவி அவரை நிக்க வைத்து ஏதோ தொழில்ல வளர்த்து விட்டாரு பரவால்ல அதனால அவர போய் தாலி எடுத்துக் கொடுக்க சொல்லுவீங்களா என்று கோபப்பட இதனை மினிஸ்டரும் அவரது மனைவியும் கேட்டுவிட்டு கடுப்பாகி நேராக ரூமுக்கு சென்று குடிக்க ஆரம்பிக்கிறார். நீங்கதான் அவ பேச்ச கேட்டுக்கிட்டு அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க நேத்திக்கு ஒரு பையன பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்படி நடந்திருக்குமா என்று சொல்ல, அந்த நந்தினிய சும்மா விடமாட்டேன் என்று கோபமாக பேசுகிறார். அர்ச்சனா தான் இப்படி பேசுறானா நீங்களே இப்படி பேசுறீங்க நந்தினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று சொல்ல அவதான் காரணம் என் பொண்ணுக்கு கல்யாணம் ஒன்னு இருக்கு அவதான் காரணம் அவளை சும்மா விடமாட்டேன் என்று கோபமாக திட்டுகிறார்.
அசோகன் மூணு பேரும் சர்க்கஸ் போகலாமா என்று மாதவி சுரேகா விதம் கேட்க நாங்களே இந்த வீட்ல நடக்கிறது நினைச்சு டென்ஷனா இருக்கும் நீங்க வேற என்று திட்டுகிறார்.நேத்து அப்பா மட்டும் நடுவுல வரலைன்னா அவளை வேற மாதிரி பண்ணி இருக்கலாம் என்று சொல்லுகிறார் மாதவி. அவளைப் பார்த்தாலே ஆத்திரமா வருது என்று சுரேகா சொல்ல, அவ இங்க இருக்கணும் என்பதனால்தான் பொறுமையா டீல் பண்ண வேண்டியதா இருக்கு என்று மாதவி சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க அசோகன் வந்து யார் என்று கேட்கிறார்.
அதற்கு அவர் சூர்யா சார் கொஞ்ச நாள் முன்னாடி ரெசார்ட்டுக்கு வந்து தங்குனாரு இல்ல அப்போ நடந்த சிசிடிவி ஃபுட்டேஜ் வீடியோ கேட்டிருந்தாரு அதுதான் எடுத்துட்டு வந்தேன் என சொல்லி கொடுக்க நானே கொடுக்கிறேன் என வாங்கிக்கொண்டு மாதவியிடம் வந்து சொல்ல நம்ம போட்டு பார்க்கலாம் என்று லேப்டாப்பில் போட்டு ஆன் பண்ணுகின்றனர். அதில் சூர்யாவும் நந்தினியும் போஸ் கொடுத்திருப்பதை பார்த்து கடுப்பாகின்றனர். அந்த நேரம் பார்த்து நந்தினி இவர்களுக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சுரேகா நிற்கவைத்து ரெசார்ட்ல ஒரே ஜாலிதான் போல என்று சொல்ல நான் வேண்டாம்னு தான் சொன்னேன் சூர்யா சார் தான் பண்ணாரு என்று சொல்லுகிறார். நிஜமாவே சார்தான் சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் மற்றும் சூர்யா இருவரும் வந்துவிடுகின்றனர். வீடியோவை பார்த்த சூர்யா இது ரெசார்ட் வீடியோ ஆச்சே என்று கேட்க ஆமா உன்கிட்ட மேனேஜர் குடுக்க சொன்னாரு என்று சொல்ல அப்ப எதுக்கு நீங்க ஓபன் பண்ணி பாக்குறீங்க என்று கேட்கிறார்.
அதுமட்டுமில்லாமல் நந்தினியை எதுக்கு கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தீங்க என்று சொல்ல மாதவி மற்றும் சுரேகா என்ன சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு பென்டிரைவ் செக் பண்ணிப் பார்த்தோம் என சொல்லி சமாளிக்கின்றனர். உன்னோட லேப்டாப் பாஸ்வேர்டு எப்படி உனக்கு தெரியும் என்று சுரேகாவிடம் கேட்க எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சுரேகா சமாளிக்க உடனே மாதவி சின்ன விஷயத்தை பெரிசாக்குறிங்க என்று டிராமா போட்டுவிட்டு சென்று விடுகிறார். சரி அவங்க போகட்டும் நீ அந்த வீடியோவை ஆன் பண்ணு பார்க்கலாம் என்று சொல்லி ரேணுகாவிடம் நந்தினியை கூப்பிட சொல்லுகிறார். நீங்க நில்லுமா என்று சொல்ல எதுக்கு என்று நந்தினி கேட்கிறார் ரெசார்ட்ல உன்னை யார் கடத்தினாங்கன்னு தெரிய வேணாமா அதை கண்டுபிடிக்க தான் சூர்யா இந்த வீடியோ கேட்டிருக்கான் என்று சொல்லுகிறார்.
இதனைக் கேட்ட ரேணுகா பதறிப் போய் இதை அர்ச்சனமாகிட்ட சொல்லனும் என்று ஓடிப் போய் தனியாக போன் போடுகிறார். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொல்ல நானே சூர்யாவை பார்க்க தான் வரேன் என்று சொல்ல இங்க ஒரு பூகம்பமே வெடிக்க போகுது. நந்தினிய கண்டுபிடிக்க சூர்யா சார் ரெசார்ட் சிசிடிவி கேமரா கேட்டு இருப்பாரு போல அது வந்திருக்கு எல்லாரும் உட்கார்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க. ஐயோ நான் இதை எதிர்பார்க்கவே இல்லை யாரும் அந்த ஃபுட்டேஜ் பார்க்கக் கூடாது எப்படியாவது தடுத்து விடு நான் வரேன் என்று சொல்லுகிறார். அத பாத்துட்டாங்கனா என்னோட கதை முடிஞ்சது என்று சொல்ல சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க வாங்க என்று ரேணுகா செல்கிறார். மறுபக்கம் சூர்யா இந்த வீடியோ பாரு இதுல இருக்குறவங்கள பாரு என்று கேட்டுக் கொண்டிருக்க நந்தினி இவன் இல்லை என்று வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்ளோ லெந்தா இருந்தா எப்படி பார்க்கிறது என்று அருணாச்சலம் கேட்க சிசிடிவி ஃபுட்டேஜ் லென்த்தா தான் இருக்கும் நம்ம பொறுமையா தான் பாக்கணும் என்று சூர்யா சொல்லுகிறார்.
அருணாச்சலம் கவனிச்சு பாருமா என்று சொல்ல இந்த இடத்துல தான் அவங்கள பார்த்தேன் என்று நந்தினி இடத்தை கவனித்து உற்று நோக்கி போக உடனே ரேணுகா அடுப்புல பருப்பு வெச்ச கருகிப் போன மாதிரி ஆயிடுச்சு என்று கூப்பிட சூர்யா போன போகட்டும் சமைக்கவே வேண்டாம் என்று சொல்ல அருணாச்சலம் ரேணுகாவிடம் வேற ஏதாவது குழம்பு வைம்மா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே ரேணுகா புளிக்குழம்பு வைக்கவா என்று கேட்க புளிக்குழம்பு கரடி குழம்பு காரக்குழம்பு என்று துரத்தி விடுகிறார். நீ பாரு நந்தினி என்று சொல்லிவிட்டு நந்தினியிடம் உன்ன கடத்தினவங்க என்ன கலர் ஷர்ட் போட்டு இருந்தாங்க என்று கேட்க கவனிக்கவில்லை என்று நந்தினி சொன்ன உடன் சூர்யா கோபப்படுகிறார். அதற்கு அருணாச்சலம் அது எப்படி அந்த நேரத்துல கவனிச்சிருக்க முடியும் விடு என்று சொல்லி வீடியோவை பார்க்கச் சொல்லுகிறார். உடனே பேட்டரி லோ என வர சீக்கிரம் பாரு இவனா இவனா என்று சூர்யா பதற்றப்பட்டு கேட்கிறார். நந்தினி அவன்தான் என்று நினைக்கிறேன் என்று சொல்லி கொஞ்சம் முன்னாடி தள்ளுங்க என்று சொல்லுகிறார். எனக்கு சரியா தெரியல அவன் தான் அவன் தான் என்று சொல்வதற்குள் ஆஃப் ஆகிவிடுகிறது. அவங்கலாமா என்று அருணாச்சலம் கேட்க, அவங்கள மாதிரி தான் இருந்தது உத்து பார்த்தால் தெரிந்து இருக்கும் என்று சொல்லி சூர்யா கோபப்பட சரி சார்ஜ் தான போச்சு விடு என்று சொல்லி லேப்டாப்பை ரேணுகாவிடம் கொடுத்து சார்ஜ் போட சொல்லி அருணாச்சலம் கொடுக்கிறார். உடனே நந்தினியின் முகம் மாறி இருப்பதை பார்த்து இன்னும் பத்து நிமிஷத்துல கண்டுபிடிச்சிடலாம் என்று சூர்யா அடித்து சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா வீட்டுக்கு வந்ததால் இவை எதுக்கு டாடி இங்கே அடிக்கடிக்க வரா எனக்கு புரியல என்று கோபப்படுகிறார். அர்ச்சனா ரேணுகாவிடம் யாராவது புட்டேஜ் பாத்தாங்களா என்று கேட்க பார்க்கவில்லை என்று சொல்ல இவர்கள் பேசுவதை மாதவி மற்றும் சுரேகா கேட்கின்றனர்.
ரேணுகா லேப்டாப்பில் எதையோ செய்து கொண்டிருக்க உடனே நந்தினி வந்து ரேணு என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க சார்ஜ் ஏறுதான்னு பார்த்தேன் என சொல்லி சமாளிக்க நந்தினிக்கு சந்தேகம் வருகிறது. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
