மனோஜை பார்த்து கண்கலங்கிய அண்ணாமலை, சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மனோஜை பார்த்து அண்ணாமலை கண்கலங்க, அருண் விஷயத்தில் சீதா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் என் தம்பி யார் தெரியுமா அவன் வந்தானா என்ன நடக்கும் தெரியுமா என்ன பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை வருகிறார். முத்து உள்ளே வந்தவுடன் என் மேல இருக்கிற கோவத்தை அவன் மேல காட்டிட்டு இருக்கியா என்று கேட்க அதற்கு அருண் அவன் அண்ணன்னு எனக்கு இப்பதான் தெரியும் என்று சொல்லுகிறார் நீ ரவுடியா குடிகாரன் இப்படித்தான் பசங்கள வளப்பாங்களா என்று கேட்க அருணாச்சலம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.
அவனை விட்டுடு என்று சொல்ல அதெல்லாம் முடியாது கேஸ் ஃபைல் பண்ணியாச்சு கோர்ட்டில் வந்து பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அருண் சென்று உட்கார்ந்து விடுகிறார். அண்ணாமலை முத்துவிடம் நீ கொஞ்ச நேரம் வெளிய இரு முத்து என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அருணிடம் சென்று ஏதோ தெரியாம பண்ணிட்டா குடும்பத்தில் இருக்கிற பிரச்சனையால் இப்படி பண்ணிட்டா அவன் நல்ல பையன் என்று சொல்லி அவன் பண்ணதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்லுகிறார். அதற்கு அருண் எஸ்.ஐ வருவாங்க பேசிட்டு போங்க என்று சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் எஸ் ஐ வந்தவுடன் அண்ணாமலை நடந்த விஷயங்களை சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்க உடனே அவர் அருணை கூப்பிட்டு அவன் ஏதோ குடிச்சுட்டு தப்பா பேசிட்டான் ஒரு அப்பாவோட பாசம் அவர் கண்ணில் தெரியுது அனுப்பி விடு என்று சொல்ல மனோஜ் சட்டையை கொடுக்கின்றனர்.
அண்ணாமலை மனோஜ் நிலைமையை கண்டு உடைந்து போய் கண்கலங்கி கொண்டே சட்டையை மாட்டி வெளியில் கூட்டி வருகிறார். வெளியிலிருந்து முத்து என் மேல இருக்குற பிரச்சனைல அவனை வெச்சிருகாங்க என்று சொல்ல உடனே அண்ணாமலை மனோஜை அழைத்து வந்த பின் அவரை காரில் ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். மனோஜ் காரில் இருந்து இறங்கியதில் இருந்து உலறி கொண்டே இருக்க வீட்டுக்குள் வந்து அம்மா அம்மா எனத் தேடுகிறார் அம்மா தான் இல்லையே என்று முத்து சொல்ல வீட்ல என்ன நடந்தது தெரியுமா என்று கேட்கிறார் நான் தான் இருந்தேன் எனக்கு தெரியாதா என்று கேட்க நான் சொல்றேன் என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா அதனால் அம்மா போயிட்டாங்க என்று சொல்ல இதே எவ்வளவு நேரம் தான் சொல்லுவ என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் உளறிக் கொண்டே இருக்க முத்து அவரை ரூமில் படுக்க வைக்கிறார்.
அண்ணாமலை உடைந்து போய் உட்கார்ந்து நான் கஷ்டப்பட்டு மூணு பேரை படிக்க வச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் தான் நினைச்சேன் ஒருவேளை நான் வளர்த்தது தான் தப்போ என்று கண்கலங்குகிறார் எனக்கு நிம்மதியே இல்ல ஒரேடியா கண்ண மூடும்போது தான் நிம்மதி இருக்குமா என்னன்னு தெரியல என்று சொல்ல எதுக்குப்பா இப்படி எல்லாம் பேசுற என்று பதறிப் போன முத்து குடும்ப பிரச்சினை வரத்தான் செய்யும் என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை இதை சரி செய்யணும்னா நான் போய் அம்மாவை கூட்டிட்டு வர என்று சொல்லிக் கிளம்ப நானும் வரம்பா என்று சொல்லுகிறார் நான் ஏற்கனவே குடிச்சிட்டு படுத்திருக்கான் வீட்ல யாரும் இல்ல மீனா மட்டும் தனியா இருக்கா அவன் வேற பார்த்துக்கணும் நீ பார்த்துக்கோ நான் போயிட்டு வரேன் என்று சொல்லி செல்கிறார்.
மறுபக்கம் அருண் பைக்கில் போக பஸ் ஸ்டாப்பில் சீதா நின்று கொண்டிருக்கிறார் கொஞ்சம் தூரம் சென்று பைக்கை நிறுத்தி சீதாவிற்கு ஃபோன் பண்ணி பேசுகிறார் இப்ப எதுக்கு இது கொஞ்ச தூரத்துல நின்னு போன் பண்ணிக்கிட்டு இருக்க நீ இன்னும் எவ்வளவு நாள் தான் லவ்வ சொல்லாம இருப்ப நானும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்றது என்று சொல்லிவிட்டு நான் இப்போ பக்கத்துல வண்டி எடுத்துட்டு வந்து நிறுத்துவேன் நீ வண்டியில ஏறுனீன்னா லவ்வுக்கு சம்மதம் என்று எடுத்துக்கிறேன். இல்லனா என்று போனை வைத்துவிட்டு சீதா பக்கத்தில் வண்டியை நிறுத்துகிறார்.வண்டியில் சீதா ஏறினாரா? இல்லையா? என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
