ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு: நடிகை ஸ்ருதி கடும் சீற்றம்

தன்னை பற்றி வெளியான ஆபாச வீடியோ தொடர்பாக ஸ்ருதி நாராயணன் கடுங்கோபத்தில் குமுறிய தகவல்கள்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ப்ரைவேட்டுக்கு மாற்றிய ஸ்ருதி, யாருக்கும் பெரிதாக பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டால்கிராம் கணக்கை பப்ளிக்கிற்கு மாற்றி இருந்தாலும் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார். மேலும், தன்னை பற்றி வெளியான அந்த வீடியோ ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது வீடியோவை தேடிப் பார்த்தவர்கள் குறித்து பதிவிட்டுள்ள அவர்’
‘ஒரு மனிதரின் வாழ்க்கை உங்களுக்கு பொழுதுபோக்கு அல்ல. ரொம்ப கடினமான காலத்தில் நான் இருக்கிறேன். நானும் ஒரு பெண் தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. அனைத்தையும் காட்டுத்தீ போல பரப்பாதீர்கள்.
வேண்டுமென்றால் உங்களது தாய், சகோதரி, காதலியை அப்படி வீடியோ எடுத்து பார்த்து ரசியுங்கள். அவர்களுக்கும் என்னை போன்ற உடல்தான் உள்ளது’ என சீறியுள்ளார்.