“பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை”: விமர்சனங்களுக்கு சூப்பர் சிங்கர் ஷிவாங்கி பதிலடி..!
பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிவாங்கி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து மூன்று சீசன்களுக்கு கோமாளியாக எதுவும் தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார். விதவிதமான டிஷ்களை செய்து செஃப்களிடம் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். முதலில் ஹோம்லியான லுக்கிலே சிவாங்கி போட்டோஷூட் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
ஆனால் சமீபமாக அவர் ஷார்ட் டிரஸ் அதிகமாக போடும் புகைப்படங்களை வெளியிட, பட வாய்ப்புக்காக இப்படி பண்றாங்க என்று கமெண்ட் தொடர்ந்து அவருக்கு வந்து கொண்டிருக்கிறது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவாங்கி பேசியுள்ளார்
அதாவது, எனக்கு ஒன்று புரியவில்லை அவுத்து போட்டு காட்டுனா மட்டும் பட வாய்ப்பு கிடைத்து விடுமா என்ன லாஜிக் இது? எனக்கு ஆத்திரம் வருகிறது. ஷார்ட் டிரஸ் அணிந்து பார்த்த போது எனக்கு சரியாக இருந்தது நான் மகிழ்ச்சிக்காகத்தான் அப்படி செய்தேன். பட வாய்ப்புக்காக செய்யவில்லை. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக் கொண்டிருக்க முடியுமா உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிட்டது என்று கூட சொல்லுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
