லீக்கான குட் பேட் அக்லி படத்தின் கதை,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
குட் பேட் அக்லி படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும் பிரசன்னா, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஏப்ரல் பத்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் கதை தற்போது வெளியாகி உள்ளது.அதாவது ஒரு அச்சமற்ற டான் தனது குடும்பத்துடன் சமூகத்தில் நிம்மதியாக வாழ தனது இறக்கமற்ற வழிகளையும் வன்முறை வாழ்க்கையும் மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அவரது இருண்ட கடந்த காலமும் மிருகத்தனமான செயல்களும் அவரை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது அவற்றை நேருக்கு நேராக சந்தித்து எப்படி எதிர்கொள்கிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் குட் பேட் அட்லி படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
