Web Ads

பாக்கியா கேட்ட கேள்வி, ஜெனி கொடுத்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேள்வி கேட்க, ஜெனி அதிர்ச்சியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 14-03-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 14-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீ யாரை கேட்டு ஆகாஷ் மேல கை வச்ச நீ பண்ணது பெரிய தப்பு என்று சொல்ல இன்னொரு தாட்டி இனியா கூட பேசணும் அவனை வெட்டி போட்டு இருப்பேன் என்று சொன்னவுடன் பாக்யா செழியனை அறைந்து விடுகிறார். உடனே அனைவரும் பதறிப் போக ஜெனி ஏன் ஆன்ட்டி செழியனை அடிக்கிறீங்க என்று கேட்கிறார். உடனே அதிர்ச்சியான பாக்யா அப்போ செழியன் பண்ணது உனக்கு தப்பா தெரியலையா என்று கேட்கிறார் உங்க பாயிண்ட் ஆப் யூ வில் இருந்து நீங்க பேசுனது சரி நான் செழியன் யோசிக்கிற விஷயத்தில் இருந்து செழியன் செஞ்சதும் சரிதான் அதுதான் அந்த பையனுக்கு ஒன்னும் ஆகல அப்புறம் எதுக்கு செழியன் அடிக்கிறீங்க என்று கேட்கிறார்.

உடனே ஈஸ்வரி அப்படி கேளு ஜெனி இவளுக்கு இவங்க பையன விட வேலைக்காரி பையன் தான் முக்கியமா போய்ட்டான் என்று சொல்லுகிறார் அதற்கு ஜெனி அந்தப் பையன் ஸ்டேட்டஸ்ல எந்த விதத்திலும் நம்மளுக்கு ஈகுவல்லா கிடையாது அதே மாதிரி செழியனுக்கு இனியா லைஃப்ல என்ன நடக்கும்னு அவனுக்கு ஒரு யோசனை இருந்திருக்கும் ஆனா திடீர்னு இந்த மாதிரி நடந்த போது அவன் கோபத்தை இது மாதிரி வெளிக்காட்டிட்டு இருப்பா அதுக்காக நீங்க ஏன் அடிக்கிறீங்க என்று கேட்க அதற்கு பாக்யா உன் புருஷனை அடிச்சது தப்புதான் என்று கையெடுத்து கும்பிடுகிறார். உடனே ஈஸ்வரி பாக்யாவால் தான் பிரச்சனை என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு எதுக்கு எல்லாரும் தப்பு மறைக்கிறதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார். செல்வி மட்டும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா என்ன நடக்கும்னு உனக்கு தெரியுமா ஜெனி என்று கேட்க, ஈஸ்வரி கம்ப்ளைன்ட் கொடுக்கட்டும் அவளை கொடுக்கலன்னாலும் நீயே கொடுக்க சொல்லுவ போல இருக்கு என்று சொல்லிவிட்டு கோபியிடம் நாங்க பார்க்காத போலீசா என்ன கோபி சொல்ற என்று கேட்க கோபி போலீசே வந்தாலும் சரி ஆர்மி வந்தாலும் சரி எங்களுக்கு ஸ்டேட்டஸ் தான் முக்கியம் என்று சொல்லி எது வந்தாலும் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரியும் கோபியும் சென்று விடுகின்றனர். உடனே ஜெனி செழியனை அழைத்துக் கொண்டு சென்று விட இனியா அழுது கொண்டே மேலே சென்று விடுகிறார் பாக்யா எழிலிடம் என்னடா இவங்க சின்ன பையன் அடிச்சு ஹாஸ்பிடல்ல படுக்க வச்சுட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் பேசுறாங்க என்று சொல்ல கோபம் அவங்க கண்ணை மறைக்குது நீங்க போய் இனியாவ பாருங்க என்று அனுப்பி வைக்கிறார்.

இனியா ரூமில் அழுது கொண்டிருக்க என்னால தான் உனக்கு அப்படி ஆயிருக்காங்க ரொம்ப நல்ல பையன் என்னால கஷ்டப்படுற என்று சொல்ல எல்லாமே அவசரப்பட்டு முடிவு எடுத்தால் இப்படித்தான் நடக்கும் அவன் சரியாயிடுமா உனக்கு இப்போதைக்கு நான் ஏதாவது சொல்ல முடியும் என்று பாக்யா சொல்லிவிட மறுபக்கம் எழில் ஆகாஷை ஹாஸ்பிடலில் சந்திக்க ஆகாஷ் வேலை பார்த்தவுடன் பயத்தில் நான் இனியா கிட்ட பேசுறதில்ல அண்ணா என்னை அடிக்காதீங்க என்று அலற எழில் நான் உன்னை அடிக்க வரல உன்ன பாக்க தான் வந்திருக்கேன் என்று சொல்லுகிறார் உடனே செல்வி எப்படி இருந்த என் பையனை எப்படி பயமுறுத்தி வச்சிருக்காங்க கோபி சார் கூட விடுங்க செழியன் தம்பி மனசாட்சியே இல்லாமல் நடந்திருக்காரு என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரம் பேசி விட்டு உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க என்று சொல்ல கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என்று ஆகாஷ் சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் சோர்வாக வீட்டுக்கு வர கோபி என்ன ஆச்சு என்று கேட்கிறார் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்தேன் என்று சொல்ல உடம்பு ஏதாவது சரியில்லையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆகாஷ பார்த்துட்டு வந்தேன் சொல்லுகிறார் பிறகு உடனே கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க நானும் பேசக்கூடாது இருந்தா பார்த்தா நீங்க பேச வைக்கிறீங்க என்று சொல்லி நம்ம குடும்பத்துக்கு இனியாவளதான் மானக்கேடாயிடுச்சா இதுக்கு முன்னாடி எதுவுமே நடந்தது இல்லையா தெரு சிரிக்கிற மாதிரி என்று கேட்கிறார் ஏன் இவர் பண்ணல என்று கோபி பண்ண விஷயத்தை சொல்ல ஈஸ்வரி உங்க அப்பனுக்கு ஒரு மரியாதை கொடுத்து பேச மாட்டியா என்று கேட்க உடனே மீண்டும் வாக்குவாதம் நடக்கிறது. கோபி என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? இனியா என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 14-03-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 14-03-25