ஒரு கனவு நிறைவேறி ஆச்சி.. இன்னொரு ஆசை இருக்கு, மதுரை முத்துவின் நல்ல மனதை பாராட்டும் ரசிகர்கள்..!
ஒரு கனவு நிறைவேறி இருக்கு ஆனால் இன்னொரு ஆசை இருக்கு என்று மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. இவரின் ஜோக்குக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
ஏற்கனவே அவருடைய தாய் தந்தை மற்றும் முன்னாள் மனைவிக்கு ஒரு கோவில் கட்டி வருவதாக நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது வீடு மற்றும் கட்டி இருக்கும் கோவிலை காட்டி இன்னும் 15 நாட்களில் திறப்பு விழா ஏற்பாடு செய்யப் போவதாக சொல்லி இருக்கிறார். ஒரு கனவு நிறைவேறி விட்டதாகவும் இன்னொரு ஆசை இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அந்த இன்னொரு ஆசை என்னவென்றால் அவர் வீட்டின் அருகே இருக்கும் இடத்தில் ஒரு ஏழு எட்டு ரூம் கட்டி அதில் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை தங்க வைத்து படிக்க வேண்டும் என்பதுதான் அதுமட்டுமில்லாமல் நம்ம சக்திக்கு தகுந்தபடி முதியோர்களையும் தங்க வைக்கணும் என்ற ஆசையும் இருக்கிறது. மேலும் ஒரு நூலகத்தை உருவாக்கி தன்னிடம் இருக்கும் 7000 8000 புத்தகங்களை இங்கே வைத்து அந்த பசங்களை படிக்க வைக்க ஒரு முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram