கோலாகலமாக தொடங்க இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10., கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே..?
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தொடங்க உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தற்போது ஜூனியர் சீசன் 10 கோலாகலமாக தொடங்க உள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக கே எஸ் சித்ரா மற்றும் மனோ உடன் முதல் முறையாக டி இமான் இணைந்துள்ளார். வழக்கம்போல் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுப்பாளராக இணைந்துள்ளனர் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையை வெளிப்படுத்திய கிருஷ்ணமூர்த்தி, அல்கா அஜித் , ஸ்பூர்த்தி, பிரித்திகா, கிருஷாங் மற்றும் ஸ்ரீநிஷா போன்ற பங்கேற்பாளர்கள் இன்று புகழ்பெற்ற பின்னணி பாடல்கள் ஆக திரையுலகில் பிரகாசித்து வருகின்றனர்.
மேலும் தங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த மேடையில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணிபுரியும் வாய்ப்பு கொடுத்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்க தவறாதீர்கள்..!