பெண் போட்டியாளர்களுக்கிடையில் உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
பெண் போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சிசண் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்..
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள் அணியினர் கிச்சன் டாஸ்க் சொல்ல அதற்குப் பெண் போட்டியாளர்கள் சம்மதிக்கவில்லை.
ஆனால் தற்போது சௌந்தர்யா மற்றும் சிலர் சம்மதிக்க பெண் போட்டியாளர்கள் செய்வதாக சொல்ல பவித்ரா எனக்கு விருப்பம் இல்லாம நீங்களே முடிவு பண்ணிட்டு சொல்றது அந்த எல்லாத்துக்கும் நான் தலைய ஆட்டிட்டு இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram