பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் பொதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுவிதமாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்
நேற்று நடந்த எபிசோடில் யாரும் எதிர்பாராத விதமாக சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டார். 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த சுனிதா சுமார் 7 லிருந்து 8 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வாரம் 13 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.