Pushpa 2

வீட்டை விட்டு போன ரோகினி, விஜயா சொன்ன வார்த்தை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ் மீது கோபப்பட்டு ரோகினி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 28-12-24
SiragadikkaAasai Serial Today Episode Update 28-12-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி இடம் மனோஜ் பேச வர கோபப்படுகிறார். நீ எனக்காக ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணி பேசல என்று கேட்க நீயும் என்னை பத்தி பேசினது தப்பு தானே என்று சொல்லுகிறார். எனக்கு எதுவுமே தெரியாத முட்டாள் மாதிரி சொன்ன என்று கேட்க அப்ப நான் சொன்னது மட்டும்தான் உனக்கு தப்பா தெரியுது அத்தனை பேரும் முன்னாடி என்ன அடிச்சது உனக்கு தப்பா தெரியலை என்று சொல்ல நீ பேசினதும் தப்புதான் என்று மீண்டும் மனோஜ் அதையே சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் ரோகினி கோபப்பட்டு வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் விஜயா கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை நீ பண்ணது தப்பு விஜயா என்று சொல்லுகிறார். அவ பண்ணது மட்டும் சரியா என்று சொல்ல நீ முதல்ல இருந்தே தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுன அதுக்காக தான் எல்லாம் மருமகளையும் ஒரே மாதிரி பாரு என்று சொன்னேன் என்று சொல்ல அதற்கு விஜயா இப்போ நான் கொண்டு வந்து மருமகள் சரியில்லன்னு சொல்றீங்களா என்று கேட்கிறார். நான் அப்படி சொல்லல ரோகினி மட்டும் தப்பு பண்ணல மனோஜ் சேர்ந்து தான் பண்ணி இருக்கான் ஆனால் தண்டனை கொடுக்கிறது ஒருத்தருக்கு மட்டும் இருந்தா எப்படி என்று கேட்க இப்ப என்ன மனோஜ் அடிக்க சொல்றீங்களா என்று சொல்லுகிறார்.

அவனுக்கு யாரையும் ஏமாத்த தெரியாது முதல்ல அந்த ஜீவா யாமாத்துனா இப்போ ரோகினி சொல்றத கேட்டு பொய் சொல்லி இருக்கா என்று சொல்ல அப்போ அவனுக்கு யோசிக்கவே தெரியாதா என்று அண்ணாமலை கேட்கிறார். அந்த நேரம் பார்த்து மனோஜ் வந்து ரோகினி வீட்டை விட்டு போன விஷயத்தை சொல்ல விஜயா பேக் எடுத்துட்டு போனாளா இல்ல சும்மா போனாளா என்று கேட்கிறார் அதற்கு மனோஜ் ஹேண்ட் பேக் மட்டும் தான் எடுத்துட்டு போயிருக்கா என்று சொல்ல அப்ப திரும்பி வந்துருவா விடு என்று சொல்கிறார் அண்ணாமலை நீ போற வரைக்கும் பாத்துட்டு இருந்தியா தடுக்கலையா என்று கேட்க விஜயா ஒன்னும் தேவை இல்ல அவளுக்கு நீ எதுவும் போன் பண்ணாத பேசாத அவளே வரட்டும் என்று சொல்லுகிறார்.

ரோகிணி அம்மா மடியில் படுத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார். ரோகினி அம்மா கஷ்டப்படாத கல்யாணி அவரு மேலயும் தப்பு இருக்கு ஆனா அவங்க அம்மாக்கு இவர் மேல பாசம் அதிகம் நீயே சொல்லி இருக்க அப்படி இருக்கும்போது நீ எதுக்கு இவர் மேல குறை சொன்ன என்று கேட்கிறார். நான் பண்ணது தான் தப்பு என்று சொல்றியா கேட்க நான் அப்படி சொல்லல அவசரப்பட்டு அதை பேசி இருக்க வேணாம்னு சொல்றேன். உடனே ரோகிணி அம்மா நீ அந்த வீட்டுக்கு போ அங்க இருந்து வந்துட்ட எந்த பலனும் இல்லை. தொலைச்சத அந்த இடத்தில் தான் தேடணும் வெளியில் தேடி பிரயோஜனம் இல்லை என்று அட்வைஸ் கொடுக்கிறார்.ரோகினியும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி ரீல்ஸ் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க மீனாவும் வர அவருக்கும் காட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த நேரம் பார்த்து விஜயா வர இந்த வீட்ல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அதுக்குன்னு சிரிக்க கூடாது என்று ஸ்ருதி கேட்கிறார். உடனே மனோஜ் விஜயாவிடம் ரோகினி இன்னும் வீட்டுக்கு வரலாமா போன் கூட பண்ணல நான் வேணா பண்ணட்டுமா என்று கேட்க ஒன்னும் பண்ண தேவையில்லை போனவர்களுக்கு வர தெரியும் என்று பேசிக் கொண்டிருக்க ரோகிணி படிக்கட்டில் இது எல்லாம் கேட்டுக் கொண்டே வருகிறார். வாசலில் ரோகினி நிற்க மனோஜ் பேசப்போக விஜயா பேசவிடாமல் தடுத்து நிறுத்துகிறார். மீனாவிடம் காபி கேட்க இப்பதானே குடிச்சீங்க திரும்பவும் தலைவலி வந்தா தானே காபி கேட்பீங்க என்று சொல்ல தலைவலி வந்ததுனால தான் கேட்கிறேன் என்று ரோகினியை சொல்லுகிறார் இதனால் ரோகினி எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்று விடுகிறார்.

விஜயாவிடம் பேச ரூமுக்கு ரோகினி வர என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயா அவர்களின் பதில் என்ன? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 28-12-24
SiragadikkaAasai Serial Today Episode Update 28-12-24