வீட்டுக்கு வந்த கோபி, பாக்கியா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
கோபி வீட்டுக்கு வர பாக்யா கேள்வி கேட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோவிலுக்கு சென்று அனைவரும் திரும்பி வந்து கொண்டிருக்க ஒரு காபி குடிக்கலாம் என்று முடிவு செய்து காரை நிறுத்துகின்றனர். செழியன் இறங்கி காபி வாங்க போக கோபி ஈஸ்வரி இடம் வெளியே இறங்கி நிற்கலாமா என்று சொல்ல அவரும் இறங்கி வருகிறார்.
உடனே இப்பதான் கோபி உன் முகத்துல சந்தோஷம் இருக்கு நீ இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் நீ எங்களை விட்டு போயிடாத நீ எங்களை விட்டு போனதுனால நாங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டோம் பாக்யாவும் பசங்களும் வச்சுட்டு கஷ்டப்பட்டா உங்க அப்பா கிட்ட எல்லாம் எத்தனை நாள் சொல்லி அழுதுருக்கேன் தெரியுமா? அவரும் கஷ்டப்பட்டாரு நீயும் பாக்யாவும் சேர்ந்து வாழ மாட்டீங்களா என்று கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு அவருடைய ஆசை நிறைவேறம போய் சேர்ந்துட்டாரு. நானும் நிறைவேறாத ஆசையோடு போய் சேர்ந்து நினைக்கிறேன் என்று சொல்லி அழ நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா. நான் உங்களை விட்டு எங்கவும் போக மாட்டேன் என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் நீ பாக்யா கூட சேர்ந்து வாழணும் கோபி என்று சொல்ல கோபி அமைதியாக இருக்கிறார்.
வீட்டிற்கு எல்லோரும் வந்தவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க பாக்யா வரவேற்று காபி போடவா என்று கேட்கிறார் ஈஸ்வரி நாலு காபி போடு பாக்யா என்று சொல்ல கோபி வேணாம் வேணாம் என்று சொல்லுகிறார் உடனே பாக்யா நால்வருக்கும் காபி போட்டு கொடுக்க ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். பிறகு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று பாக்யா கேட்க என்கிட்டயா என்று கோபி தயங்குகிறார். உடனே ஈஸ்வரி அதான் பேசணும்னு சொல்ற இல்ல போய் பேசிட்டுவாப்பா என்று சொல்லுகிறார்.
பிறகு இருவரும் ரூமில் பேச போக பாக்யா ட்ரிப்பெல்லாம் எப்படி போச்சு என்று கேட்கிறார் அதற்கு கோபி சூப்பரா போச்சு ஊர்ல எல்லாரும் நீ வரலையான்னு கேட்டாங்க பாக்யா என்று சொல்லுகிறார். இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டா நாங்க எல்லாருமே ஜாலியா இருந்துட்டு வந்தோம் என்று சொல்ல உங்களோட சந்தோஷத்த மட்டும் தான் பாப்பீங்களா என்று கேட்டுவிட்டு ராதிகா கிட்ட சொன்னிங்களா என்று நான் போகும்போது மெசேஜ் பண்ணுனே என்று சொல்ல பதில் சொன்னாங்களா என்று கேட்கிறார்.
இல்ல ஆபீஸ் வேலை பிஸியா இருந்திருப்பா என்று சொல்ல ஆமா ஒரே ஆளா வீட்டை காலி பண்ணனும்னா கஷ்டம் தானே என்று சொல்லி பாக்யா கோபப்படுகிறார்.இங்க ராதிகா உடைந்து போய் உட்கார்ந்து இருக்காங்க அவங்க வாழ்க்கையே தொலைச்சிட்டு பேசுற மாதிரி பேசுறாங்க. என்னென்னமோ உளர்றாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இந்த வீட்ல இருந்து கிளம்ப போறாங்க இப்பயும் நீங்க போய் ராதிகாவை பார்க்கவில்லை என்றால் கடைசி வரைக்கும் போய் பார்க்கவே முடியாது என்று சொல்லுகிறார் பாக்யா. இப்பயும் உங்க அம்மா பேச்சை கேட்டுகிட்டு நான் இங்கதான் இருப்பேன் அப்படின்னா உங்கள மாதிரி ஒரு சுயநலவாதி பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாமல் ராதிகாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனால் அவங்க அம்மா வீட்டுல நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்லி கூட்டிச் சென்ற பிறகு நீங்கள் பார்க்க அவர்கள் தடுத்தால் என்ன பண்ணுவீங்க என்று பாக்கிய கேட்கிறார். நான் தாலி கட்டின மனைவியை எப்படி பார்க்க வேணாம் அவங்க சொல்ல முடியும் என்று கோபப்படுவேன் என்று சொல்ல ஆனால் இங்கே இருக்கிறவங்க அப்படி தான் சொன்னாங்க என்று ராதிகாவிற்கு ஆதரவாக பேசுகிறார். உடனே கோபி புரிய வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாக்கியா என்று சொல்ல நான் உங்க நல்லதுக்காக சொல்லல ராதிகாவோட நல்லதுக்காக தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.
வெளியில் வந்த கோபி ஈஸ்வரி இடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? பாக்யா என்ன சொல்லுகிறார்? ராதிகாவை பார்க்க கோபி போறாரா? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.