Pushpa 2

சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, குழப்பத்தில் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 28-12-24
Moondru Mudichu Serial Today Promo Update 28-12-24

நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் சூர்யா நீ செஞ்சு கொடுத்த கஞ்சி சூப்பரா இருந்துச்சு எனக்கு அடிக்கடி செஞ்சு கொடு என்று சொல்ல நந்தினியும் சரி என்று சொல்லுகிறார். பிறகு நீ கட்டி இருக்கிறது தாவணியா? புடவையா? என்று கேட்க புடவை தான் சார் என்று சொல்லுகிறார். நந்தினியின் போனில் ஒரு மெசேஜ் வர அதை நந்தினி ஓபன் செய்து பார்க்கிறார். அதில் விஜி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு சமைக்க ஆர்டர் கிடைத்துள்ளதாகவும், பதினோரு மணிக்கு வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். இதனால் நந்தினி சந்தோஷப்பட என்ன விஷயம் என்று கேட்கிறார்.

பிறகு உனக்கு உங்க தங்கச்சி என்றால் ரொம்ப பிடிக்குமா என்று கேட்க என் தங்கச்சி இங்கதான் சார் எனக்கு எல்லாமே என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் நந்தினி தனியாக பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். என்ன விஷயம் ஐயா என்று கேட்க, சூர்யா பேர்ல சொத்து ஒன்னு ரெஜிஸ்டர் பண்ணலாம் என்று இருக்கோம். அதுக்காக கையெழுத்து போடணும் மாதவி,சுரேகாவும் வராங்க ஆனா சில நேரம் ரத்த சொந்தம் இல்லாத உறவை கேக்குறாங்க அதனால ஒரு சைன் மட்டும் போட்டுட்டு வந்துடலாம் என்று சொல்ல நந்தினி வர தயங்குகிறார்.

பிறகு சம்மதிக்க 10:30 மணிக்கெல்லாம் முடிஞ்சிடுமா என்று கேட்க முடிஞ்சிருந்தாமா நினைக்கிறன் என்று கேட்க எதுக்கு கேக்குறமா என்று கேட்கிறார். இல்ல ஐயா விஜி அக்கா வீட்டுக்கு போலாம்னு இருக்கேன் என்று சொல்ல அதுக்குள்ள போயிடலாமா என்று சொல்லுகிறார். உடனே சூர்யா வர நந்தினிய சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டாச்சு என்ற ஜாடையில் சொல்ல சூர்யாவும் புரிந்து கொண்டு சரி வா நந்தினி போகலாம் என்று கூப்பிட்டு சொல்கிறார்.

மாதவி சுரேகா மற்றும் அசோகன் மூவரும் ரெடியாகி உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் சுந்தரவல்லி ரூமில் வந்து பார்க்கிறார். இன்னும் ஆபீஸ்க்கு போலயா சுந்தரவல்லி என்று கேட்க கிளம்பிட்டேன் ஆனா உடம்புக்கு கொஞ்சம் முடியல அதுக்காக டேப்லெட் போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்ல, அதெல்லாம் ஆபீசுக்கு போய் நாலு பேர் கிட்ட பேசுனா சரியா போயிடும் கிளம்பு என்று கிளப்பி வைக்கிறார். வெளியில் வந்த சுந்தரவல்லி மூவரையும் பார்த்து எங்க வெளியே போகிற மாதிரி ரெடியா இருக்கீங்க என்று கேட்க அவர்களும் எதையோ சொல்லி சமாளிக்கின்றனர்.

கிளம்பும் நேரம் பார்த்து புஷ்பாவை கூப்பிட்டு இன்னைக்கு என்ன டிபன் என்று கேட்க இட்லியும் மணத்தக்காளி குழம்பு என்று சொல்ல எனக்கு டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்துவிடு என்று சொல்லுகிறார். நீங்க சீக்கிரம் கிளம்புங்கம்மா டிராபிக் ஆயிடும் என்று சொல்ல ஆமா இந்த புஷ்பா வேற இன்னும் எடுத்துக்கிட்டு வரல என்று சொல்ல சுரேகா நான் போய் வாங்கிட்டு வரேன் என்று ஓடுகிறார். இன்னைக்கு என்ன நீங்க என்னை அனுப்புறதுல இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க என்று சுந்தரவல்லி கேட்கிறார். பிறகு குடும்பமாக ஒன்றாக சேர்ந்து சுந்தரவல்லி காரில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். உடனே சூர்யாவும் நந்தினியும் வர இவர்களும் காரில் ஏறி ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய கிளம்புகின்றனர்.

நந்தினி சூர்யாவிடம் இடம் வாங்க போறீங்களா? வீடு வாங்க போறீங்களா? என்று கேட்க இடம்தான் என்று சொல்ல நீங்க இதுவே ஞாபகம் இல்லன்னு சொல்றீங்க ஆனா எங்க ஊர்ல அதை ரொம்ப செலபிரேட் பண்ணுவாங்க என்று சொல்லுகிறார். பிறகு ஊரில் நடக்கும் விஷயங்களை சூர்யா அருணாச்சலம் சொல்லியதாக வள்ளி தெய்வானை நாடகம் குறித்து சொல்ல இப்பவும் அந்த நாடகம் போட்டுவிட்டு தான் சார் இருக்காங்க என்று சொல்லி பேசிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வந்து இறங்கிய பிறகு சூர்யாவிற்கு ஃபோன் பண்ணி எங்க இருக்கீங்க என்று கேட்கின்றனர். நந்தினிக்கு எதுவும் டவுட் வரலல என்று கேட்கிறார். பிறகு வரவழியில பூவித்தால் நந்தினிக்கு வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா என்று சொல்லுகிறார்.சரி என சூர்யாவும் போனை வைக்கிறார். பிறகு ஒரு பூக்கடையை நிறுத்தி நந்தினி பூ வாங்க சொல்ல இவர் இப்படி எல்லாம் வாங்கிக் கொடுக்கிற ஆள் இல்லையே என்று யோசிக்கிறார் பிறகு எதுக்கு என்று கேட்க சூர்யா ஓவரா பேசி சந்தேகத்தை வரவச்சிடாதடா என்று மனசுக்குள் நினைத்துக் கொள்கிறார். உடனே நந்தினி பூவை வாங்கி வைத்துக் கொள்கிறார். இப்ப எவ்ளோ அழகா இருக்கு என்று சொல்லி சூர்யா அங்கிருந்து நந்தினி கூட்டி செல்கிறார்.

இவர்களும் ரிஜிஸ்டர் ஆபீஸ் வர நீங்க எங்க வெயிட் பண்ணுங்க நான் உள்ள போயிட்டு வரேன் என்று சொல்லி, அருணாச்சலம் விசாரிக்க உள்ளே வருகிறார். அசோகன் சூர்யாவிடம் என்ன மாப்ள பூவெல்லாம் வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்திருக்க போல என்று சொல்ல, பாருங்க சார் நான் வேணான்னு சொன்னா கூட வற்புறுத்தி வச்சு கூட்டிட்டு வராரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அருணாச்சலம் உள்ளே விசாரிக்க இப்போ இரண்டாவது டோக்கன் போய்க்கிட்டு இருக்கு உங்களுக்கு நாலாவது டோக்கன் வெயிட் பண்ணுங்க கூப்பிடுறோம் என்று சொல்லுகின்றனர்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் குடும்பமே ஒன்று சேர்ந்து என்கிட்ட ஒரு உண்மையை மறைக்கிறாங்க. இவங்க மறைக்கிற விஷயம் சுந்தரவல்லி அம்மாவுக்கு தெரியறதுக்கு முன்னாடி எனக்கு தெரியணும் என்று யோசிக்கிறார் நந்தினி.

அர்ச்சனா மூலமாக சுந்தரவல்லிக்கு இவர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய போகும் விஷயம் தெரிந்து கோபமாகி வருகிறார். நந்தினி அப்படியே அவங்க எதை மறைக்கிறாங்க அந்த உண்மை என் வாழ்க்கையை என்ன பண்ண போகுது என்று யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 28-12-24
Moondru Mudichu Serial Today Promo Update 28-12-24