மகளின் நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட உருக்கமான பதிவு..ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.!!

மகளின் நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார் பாடகி சித்ரா.

தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இவருக்கு ஆறு முறை தேசிய திரைப்பட விருதுகளை வாங்கியுள்ளார். சின்னக்குயில் சித்ரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
பாடகி சித்ராவிற்கு திருமணமாகி 2002 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்து 2011 ஆம் ஆண்டு இறந்துள்ளார். தற்போது மகளின் நினைவு நாளான நேற்று புகைப்படத்துடன் உருக்கமான பதிவு ஒன்றை சித்ரா வெளியேற்று உள்ளார்.
அதில் உன்னை இனி என்னால் தொட முடியாது உன் பேச்சைக் கேட்க முடியாது உன்னை பார்க்க முடியாது ஆனால் நீ என் இதயத்தில் இருப்பதால் உன்னை எப்போதும் உணர முடிகிறது என் அன்பே நாம் மீண்டும் ஒருநாள் சந்திப்போம் உன்னை இழந்த வலி அளவிட முடியாது வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ தான் என்பதை நான் அறிவேன் படைப்பாளர்களின் உலகில் நீ நன்றாக வாழ்கிறாய் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram