குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!
குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் முதலில் எஸ் ஜே சூர்யா தான் வில்லனாக நடிக்க இருந்ததாக சொல்லப்படுகிறது.
எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் எப்படி இருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
