பெற்றோர் மற்றும் மனைவிக்காக மதுரை முத்து கட்டிய கோவில்.. திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!
மனைவி மற்றும் பெற்றோருக்காக மதுரை முத்து கட்டிய கோவில் திறப்பு விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நகைச்சுவை கலைஞராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை முத்து. இவரின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இது மட்டும் இல்லாமல் இவர் பட்டிமன்ற நடுவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் மதுரை முத்து சமீபத்தில் மனைவி மற்றும் பெற்றோருக்காக கோவில் கட்டி வருவதாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் போது சொல்லி இருந்தார்.
விரைவில் திறப்பு விழா நடக்கும் என்றும் அறிவுத்திறந்த நிலையில் தற்போது திருமங்கலம் அருகே அரசு பட்டி கிராமத்தில் பெற்றோர் மற்றும் மனைவியின் உருவ சிலை அமைத்து கோவில் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இதில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு முதியோர்களுக்கு வேட்டி சேலைகளும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கியுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
View this post on Instagram